அதிகபட்ச ஆரோக்கியம் தரும் ஒன்பது கீரைகள் எவை தெரியுமா?

Do you know which are the nine Keeraigal that give maximum health?
Do you know which are the nine Keeraigal that give maximum health?

நாம் உண்ணும் உணவில் அதிக ஊட்டச் சத்துக்களும் ஆரோக்கியமும் தருவதில் முன்னணியில் நிற்பவை காய்கறிகள் என்று கூறினால் அது மிகையாகாது. அதிலும் கீரை வகைகளில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்களோ எண்ணிலடங்காதவை. இதனாலேயே மருத்துவர்கள் தினமும் ஒரு கீரையை தவறாமல் உணவுடன் சேர்த்து உண்ண பரிந்துரைக்கின்றனர். கீரைகளில் அதிகபட்ச ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்பது கீரைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பசலைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியது; ஆன்டி கேன்சர் குணம் கொண்டது; ஜீரண மண்டல ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக் கூடியது.

கடுகுக் கீரையில் கலோரி அளவு குறைவு. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இதில் வைட்டமின்கள், இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய கனிமச் சத்துக்களும் அதிகம் உள்ளன. இக்கீரை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வல்லது. தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். வட இந்தியாவில் இது அதிகம் பயன்பாட்டில் உள்ளது.

வெந்தயக் கீரை பருப்பு, கிரேவி வகைகள் மற்றும் சப்பாத்தி மாவுடன் சேர்த்து சமைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், மாங்கனீஸ், வைட்டமின் B6 ஆகியவற்றுடன் ஆற்றலும் சக்தியும் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்களும் அதிகம்.

முள்ளங்கிக் கீரையில் வைட்டமின் C, B6, K ஆகியவற்றுடன் இரும்புச் சத்தும் உள்ளது.

அமராந்த் இலைகளில் வைட்டமின்களும் மினரல்களும் அதிகம் நிறைந்துள்ளன. இந்த இலைகளை கிரேவி போன்ற உணவு வகைகளில் சேர்த்து சமைக்கலாம்.

முருங்கைக் கீரை தென் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுவது. இதில் வைட்டமின்களும் மினரல்களும் மிக அதிகம். வைட்டமின் C, A, B1, B2, B3, B6, போலேட் மற்றும் இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், சிங்க் ஆகியவை அதிகம் உள்ளன.

பஸெல்லா ஆல்பா (Basella Alba) என்ற கீரை வங்காளிகளின் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஊட்டச் சத்துக்கள் மிக அதிகம்.

இதையும் படியுங்கள்:
கால் ஆட்டும் பழக்கம் என்பது பரம்பரை பழக்கமா? உடல்நலக் கோளாறா?
Do you know which are the nine Keeraigal that give maximum health?

கொலோகேசியா (Colocasia) இலைகளில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C, E, A, போலிக் ஆசிட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தீங்கிழைக்கும் ஃபிரிரேடிகல்களை எதிர்த்துப் போராடி ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து உடலைக் காக்கின்றன. கேன்சர், இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தை தடுக்கின்றன.

பிரம்மி இலைகள் நரம்புக்கும் மூளைக்கும் வலு சேர்க்கும் சிறந்த மூலிகை. பெரு மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதை சட்னிகளிலும் சாலட்களிலும் சேர்த்து உண்ணலாம். அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை.

இத்தனை சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளில் தினம் ஒன்றை உணவுடன் சேர்த்து உட்கொண்டு உடல் நலம் பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com