கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் எவை தெரியுமா?

Do you know which foods prevent cervical cancer?
Do you know which foods prevent cervical cancer?https://www.newmannar.lk

பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இப்பொழுது ஏராளமாக வருகின்றன. கருப்பை புற்று நோய்க்கு என தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது. ஆனால், குடும்ப வரலாறு, உடல் பருமன், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இப்படி பல காரணங்களைச் சொல்லலாம். நம் உணவிலும் கூட அதைத் தடுக்கும் வண்ணம் சத்தான உணவுகள் சிலவற்றை சாப்பிடலாம். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

காளான்: காளானில் லெண்டினன் எனப்படும் மூலப்பொருள் அதிகமாக காணப்படுகிறது. இது பல்வேறு வகையான புற்றுநோய் செல்களையும் வளர விடாமல் தடுப்பதற்கு உதவி செய்கிறது. வாரத்தில் இரண்டு நாட்களாவது காளானை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

புதினா: வயிறு உப்புசம், அஜீரணம், வாய்வு தொல்லை போன்ற பல்வேறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் கூட கருப்பை புற்று நோய்க்கான மிக முக்கிய காரணமாக இருக்கிறது. புதினாவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொண்டு வருவதால் வயிற்றுக் கோளாறுகள் நீக்கும். தினசரி எடுத்துக்கொள்ளும் டீயில் புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது. இதனால் வயிற்று கோளாறு நீங்கி கருப்பை புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவும்.

பூண்டு: பூண்டு குடல், கணையம், கர்ப்பப்பை என வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பூண்டு புற்று நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது.

சோயா பொருட்கள்: சோயா மில்கையும் சோயா பொருட்களையும் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கான அடுத்த நிலையாகும். கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சோயா பொருட்களை பயன்படுத்துவது அதன் அறிகுறிகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கப் பயன்படும்.

வெங்காயம்: வெங்காயம் மிகவும் பொதுவான அதேசமயம் மிகவும் உபயோகமான காய்கறி ஆகும். உண்மையில் வெங்காயத்தில் புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய பொருட்கள் நிறைய இருக்கின்றன. கார்செடின், அப்பிஜெனின் மற்றும் ஆந்தோசியபின்கள் போன்றவை புற்றுநோய் சொல்களை அழிக்க உதவும். சிவப்பு வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் மற்ற பாகங்களுக்குப் பரவுவதைத் தடுக்கும்.

இஞ்சி: பல்வேறு மோசமான நோய்களுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் ஷோகள் போன்ற பொருட்கள் புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. இஞ்சி நீண்ட காலமாக புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
எல்லா வயதினருக்கும் பாதுகாப்பான வீடு!
Do you know which foods prevent cervical cancer?

மீன்கள்: எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவது ஒமேகா 3 அமிலங்களை பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஒமேகா 3 மூலம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த ஒமேகா 3 அமிலம் அதில் உள்ள ஆண்டி ஆன்ஜியோஜெனிக் பண்புகளால் புற்று நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலம் ஒமேகா 3 அமிலம் புற்று நோய் செல்களுக்கு கிடைக்கும் இரத்தத்தை குறைக்கிறது. இதனால் புற்றுநோய் செல்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.

ஆப்பிள்: ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகின்றன. மேலும், உணவு நார்ச்சத்து மூலம் செறிவூட்டப்பட்ட இது புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாகும். மேலும் இது எடை மேலாண்மைக்கு உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பெர்ரி பழங்கள்: ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட பொதுவாக பரிந்துரைக்கப்படும் பழங்கள் ஆகும். இதில் புரோந்தோசயனிடின் ஆக்ஸிஜனேற்றிகள் லைகோபின் ஆகியவை ஏராளமாக உள்ளன. ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களை சேதப்படுத்தும் ப்ரீரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன. எனவே, புற்றுநோயை தடுக்கின்றன.

திராட்சை: திராட்சைகள் ரெஸ்வெராட்ரோலின் வளமான மூலமாகும். இது புற்றுநோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றில் குறைக்கப்பட்ட அளவுடன் தொடர்புடைய ஒரு சக்தி வாய்ந்த பைட்டோ கெமிக்கல் ஆகும்.

பப்பாளி: பப்பாளி கூழ் கரோனாட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃப்ரீரேடிகல்களுக்கு எதிராக லைகோபீன் வினைபுரிவது ஒரு பயனுள்ள புற்றுநோய் முகவராக செயல்படுகிறது. பப்பாளியில் இருந்து வரும் என்சைம்கள் கட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் புரதங்களை அழிப்பதாகவும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மாதுளை: மாதுளையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. மேலும், மாதுளை சாற்றை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் வருவதை வரவிடாமல் தடுக்கிறது. புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் பாலிஃபீனால் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்ட மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com