யாரெல்லாம் பற்களுக்கு க்ளிப் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

Clip for Teeth
Clip for Teeth
Published on

உங்கள் பற்கள் சரியாக இருக்கிறதா? க்ளிப் போடலமா? இது போடுவது அவசியமா? போன்ற கேள்விகள் எழுகின்றனவா? அப்போது இதைப் படியுங்கள்.

நாம் சிரிக்கும்போது நமது அழகின்மீது நமக்கு ஒரு உறுதியையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் ஒன்றுதான் பற்கள். பலர் சிரிக்கும்போது கைவைத்து மறைத்துதான் சிரிப்பர். அப்போதே தன்னம்பிக்கை என்பது உடைந்து விடுகிறது. பின் பற்களை அழகாக்க எவ்வளவோ செலவுகளும் செய்வர். உங்களின் பற்களின் நிலை அறிந்து, அதற்கு பல் க்ளிப் தேவையா என்பதையும் அறிந்து முடிவு எடுப்பது சிறந்தது. வாருங்கள் பல் க்ளிப் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

பற்களை சீராக மாற்றுவதில் க்ளிப் பெரிய பங்காற்றுகிறது. அந்தவகையில் யாருக்கெல்லாம் தேவை என்பதைப் பார்ப்போம்.

1.  வளைந்தப் பற்கள் உள்ளவர்கள் இந்த க்ளிப்பை பயன்படுத்தலாம், ஏனெனில் இந்த வளைந்தப் பற்கள் உங்களின் பல் சிதைவுக்கு காரணமாகிவிடும். ஆகையால் முடிந்தவரை சீக்கிரம் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து க்ளிப் அணியுங்கள்.

2.  கோணல் மாணலாக வரும் பற்கள், உங்களின் தாடையில் வலி போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். ஆகையால், அவர்களும் க்ளிப் போட்டு பற்களை சீராக்கலாம்.

3.  பற்களுக்கு இடையில் இடைவெளி இருந்தால், அது பல் சொத்தைப் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் கடிப்பதில் சிரமம் ஏற்படும். இதுவே க்ளிப் பயன்படுத்தினால், அந்த இடைவெளி குறையும்.

4.   நாம் கடிக்கும்போது கன்னத்தின் பகுதிகளையோ அல்லது நாக்கையோ அடிக்கடி கடிக்கும் நிலை வந்தால், பற்கள் சீராக இல்லை என்று அர்த்தம். மேலும் பல் சொத்தை, பல் உடைதல் போன்றவையும் ஏற்படும். சில நேரத்தில் மேல் பற்கள், கீழ் பற்களைக் கடந்து வளரும். அதேபோல், கீழ் பற்கள் மேல் பற்களைக் கடந்து வளரும். அதுவும் ஒரு குறைப்பாடே. இந்த இரண்டு பிரச்னைகளையுமே நாம் க்ளிப் பயன்படுத்தி தடுக்கலாம்.

இதற்கு பல வகையான க்ளிப்களும் சிகிச்சையும் உள்ளன. இவையனைத்தையும் நீங்கள் மருத்துவரை ஆலோசித்து உங்கள் பற்களுக்கேற்ற க்ளிப்பையோ சிகிச்சையோ பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Clip for Teeth

ஆனால், இப்போது பலர் க்ளிப் போட்டால் அசிங்கமாக தெரிகிறது என்றும், பற்களை சுத்தம் செய்ய கடினமாக இருக்கிறதும் என்று சொல்கிறார்கள். அவர்களுக்காகவும் ஒரு வகையான க்ளிப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் இன்விஸிபில் க்ளிப்.

இந்த க்ளிப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதனை நீங்கள் சாப்பிடும்போது கழற்றி வைத்துவிட்டு சாப்பிட்டப் பிறகு மீண்டும் மாட்டிக்கொள்ளலாம். இது இருப்பதே தெரியாது. ஆனால் மற்ற க்ளிப்களைவிட இது விலை சற்று அதிகம். அதேபோல், இதனைப் பராமரிக்கும் முறையை மருத்துவரிடம் நன்றாக கேட்டுவிட்டு அதேமாதிரி பராமரிக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com