வேர்க்கடலை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் அலர்ஜி ஏற்படும் தெரியுமா?

Peanut allergy
Peanut allergy
Published on

னைவருக்குமே பிடித்த உணவுப் பொருள் வேர்க்கடலை. ஆனால், சிலருக்கு வேர்க்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதன் விளைவாக பல உடல் தொந்தரவுகள் உண்டாகும். யாருக்கெல்லாம் வேர்க்கடலை அலர்ஜி வரும்? அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மரபியல் காரணிகளும், குடும்ப வரலாறும்: குடும்பத்தில் பெரியவர்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால் அது பிள்ளைகளையும் பாதிக்கும். உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வேர்க்கடலையும் ஒவ்வாமையை உண்டாக்கும். ஆஸ்துமா மற்றும் அரிக்கும் சரும அழற்சி உள்ளவர்களை முக்கியமாக பாதிக்கும். சில மரபியல் காரணிகளும் ஒவ்வாமையை உருவாக்குகின்றன. சிலருக்கு வேர்க்கடலையைப் போன்றே பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி போன்றவையும் ஒவ்வாமையை உண்டாக்கும்.

மிகையாக செயல்படுதல்: வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்பட்டால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. வேர்க்கடலையில் உள்ள புரதங்களுக்கு மிகையாக செயல்படுகிறது. அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று உடல் கருதுகிறது. மேலும், அவற்றை எதிர்த்துப் போராட மிகவும் கடினமாக உழைக்கிறது. இது ஒரு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பு, புரதங்களுக்கு குறிப்பிட்ட இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. இவை தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் வெளியீட்டை தூண்டுகின்றன.

குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்கடலை அலர்ஜி: சிறு குழந்தைகளுக்கு உணவில் வேர்க்கடலையை அறிமுகப்படுத்துவது நல்லது. ஏனென்றால், சிலர் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது என்று கருதி குழந்தைப் பருவத்தில் வேர்க்கடலையை உண்ணத் தராமல் சற்றே வளர்ந்த பின்பு தருவார்கள். அது அவர்களுக்கு உடலில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

கைக்குழந்தைகளுக்கு நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்திலேயே வேர்க்கடலை சிறிதாவது அறிமுகப்படுத்த வேண்டும். பின்னாளில் அவர்களுக்கு வேர்கடலை ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க இது உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலேயே வேர்க்கடலை ஒவ்வாமைக்கு குழந்தைகள் ஆளாகவில்லை என்றால் பிற்காலத்தில் அவர்களுக்கு வேர்க்கடலை அலர்ஜி உண்டாகாது.

இதையும் படியுங்கள்:
தேசிய சட்ட தினம் எப்படி வந்தது தெரியுமா?
Peanut allergy

அரிக்கும் சரும அழற்சி: ஏடொப்பிக் டெர்மடிட்டிஸ் என்கிற அரிக்கும் சரும அழற்சி உள்ள குழந்தைகளுக்கு சருமம் உலர்ந்து போய் இருக்கும். அரிப்பும் ஏற்படும். அவர்களுக்கு வேர்கடலை அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களின் சருமம், தடைகளை வலுவாக எதிர்க்காத காரணத்தால் ஒவ்வாமைகளை எளிதில் உடலில் நுழைய அனுமதிக்கிறது.

ஆரோக்கியமற்ற குடல்: மனிதனின் குடல் பல பாக்டீரியாக்களின் தாயகமாக உள்ளது. அவை செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகின்றன. ஒரு மனிதனின் குடல் பாக்டீரியா சீரானதாகவோ அல்லது ஆரோக்கியமற்றதாகவோ இருந்தால் அது அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பையும் பாதிக்கும். அவர்களுக்கு மிக எளிதாக வேர்க்கடலை அலர்ஜி உண்டாகும்.

அதிக உணர்திறன்: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மண், சேறு, புழுதி போன்ற சூழ்நிலைகளில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களது உடல் போதுமான கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு வெளிப்படாமல் இருக்கிறது. எனவே, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக உணர்திறன் கொண்டதாக மாறுகிறது. எனவே, இவர்களுக்கு மிக எளிதில் வேர்க்கடலை அலர்ஜி உண்டாகிறது.

வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்படுத்தும் அறிகுறிகள்: மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம், இருமல், தும்மல், கரகரப்பு, தொண்டை இறுக்கம், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அரிப்பு, வீங்கிய கண்கள், இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி, மயக்கம், கவலை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

வேர்க்கடலை அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்: சிறிய பேக்கரிகள் அல்லது உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் மிட்டாய்கள், பப்ஸ், சமோசா, ஐஸ்கிரீம், கஸ்டர்ட், கடைகளில் விற்கப்படும் தயிர் பாக்கெட்டுகள், சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com