ஆவாரம் பூவை ‘ஏழைகளின் தங்கம்’ என்று ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா?

Uses of Avaram flower
Uses of Avaram flower
Published on

வாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்று சொல்வார்கள். நம் உடலில் ஏற்படும் பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் ஆவாரம் பூவிற்கு உண்டு. அத்தகைய ஆவாரம் பூவை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆவாரம் பூ சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். Type 2 Diabetesல் அவதிப்படுவோருக்கு இது மிகவும் நல்லது. தண்ணீரிலே ஆவாரம் பூவை போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிக்கும்போது இரத்தத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இதனால், சர்க்கரை நோய் விரைவில் குணமாகும்.

2. நாம் அனைவருமே வசீகரமான தோற்றத்துடனும், முகப்பொலிவுடன் இருக்க ஆசைப்படுவோம். காய்ந்த ஆவாரம் பூவை பொடி செய்து உடலில் தேய்த்து குளித்துவர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி, பருக்கள், சரும வறட்சி, சரும சுருக்கம் போன்றவற்றை குணமாக்குகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பு பாலில் ஆவாரம் பொடியை சேர்த்து குடித்து வர சரும பளபளப்பை பெறலாம்.

3. ஆவாரம் பூ நம் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை தடுத்து உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது. ஆவாரம் பூவுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வர, உடல் சூடு குறையும். மேலும் உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், கண் சிவந்திருப்பது போன்ற பிரச்னைகளை சரி செய்யும்.

4. ஆவாரம் பூவில் Anti Parasitic பண்புகள் உள்ளதால், இது வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும். அது மட்டுமில்லாமல், வயிற்றில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தமாக்கும்.

5. சீரற்ற மாதவிடாயை சீராக்க ஆவாரம் பூ உதவும். பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் அடிவயிற்றில் உஷ்ணம் இருப்பதுதான். அதை ஆவாரம் பூ சாப்பிடுவதால் குணப்படுத்தலாம். மேலும், அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும்.

6. ஆவாரம் பூவில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி கேன்சர் உருவாவதற்கான காரணிகளையும் அழிக்கும். ஆவாரம் பூவை Natural blood Purifier என்று சொல்வார்கள். Anti cancer பண்புகள் ஆவாரம் பூவில் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?
Uses of Avaram flower

7. சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை ஆவாரம் பூ குணமாக்கும். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறுநீர் வழியாக Albumin என்னும் புரதச்சத்து இழப்பு ஏற்படும். இதை முற்றிலுமாக நிறுத்தக்கூடிய ஆற்றல் ஆவாரம் பூவிற்கு உண்டு. ஆவாரம் பூவில் Anti microbial பண்புகள் அதிகம் உள்ளது. இது சிறுநீரகப் பாதையில் அழற்சி ஏற்படுத்தும் E.coli போன்ற பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. எனவே, ‘ஏழைகளின் தங்கம்’ என்று அழைக்கப்படும் ஆவாரம் பூவை தினமும் டீயாக அருந்தி வர ஆரோக்கியம் அதிகரிக்கும். முயற்சித்துதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com