குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏன் வெள்ளைத் தேமல் வருகிறது தெரியுமா?

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏன் வெள்ளைத் தேமல் வருகிறது தெரியுமா?

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் உடலில் வெள்ளை நிறத் தேமல் (Pityriasis Alba) தோன்றும். பொதுவாக, கன்னத்தில் வட்டமாக  காணப்படும். சிலருக்கு கைகள், கழுத்து, மார்பு, உட்காரும் இடம் போன்ற உடலின் பிற பகுதிகளில் தோன்றக்கூடும். இந்த வெள்ளைத் தேமல் பொதுவாக வறண்டுபோய் காணப்படும். மாய்ஸரைசர் போட்டாலே சரியாகிவிடும். ஆனாலும், முகத்தில் வெள்ளை நிற தழும்புகளை உருவாக்கி விடும்.

வெள்ளைத் தேமல் வருவதற்கான காரணங்கள்:

1. குழந்தைகளை குளிப்பாட்டும்போது குழந்தைகளுக்கான மென்மையான சோப்பு போடாமல் பெரியவர்கள் உபயோகிக்கும் கெமிக்கல் அதிகமாக உள்ள சோப்பு போட்டு குளிக்க வைப்பதால் வெண்தேமல் வருகிறது.

2. முகத்திற்கு இரண்டு தடவை சோப்பு போட்டு கழுவுதல், கடலை மாவு போட்டு அதிக நேரம் தேய்த்துக் கழுவுதல் போன்ற செயல்களால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி வெண்தேமல் வருகிறது.

இதையும் படியுங்கள்:
செரிமானப் பிரச்னை இருந்தால் தவிர்க்க வேண்டியவை!
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏன் வெள்ளைத் தேமல் வருகிறது தெரியுமா?

3. குழந்தைகளுக்கு அதிக அளவில் முத்தம் கொடுத்தாலும் எச்சில் பட்டு அந்த ஈரம் காய்ந்த உடன் தேமல் தோன்றுகிறது.

4. குழந்தைகள் பஞ்சு பொம்மைகளை கட்டிப்பிடித்து தூங்குவதாலும் வெண்தேமல் வருகிறது.

தீர்வுகள்: தன்னாலேயே வெள்ளை பேட்சஸ் உதிர்ந்து விடும். சாதாரண மாய்சரைசர் கிரீம் போட்டாலே சரியாகிவிடும். குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கான சோப்பு, கடலை மாவு போடக்கூடாது. குழந்தைகளுக்கு தாய், தந்தையைத் தவிர பிறர் முத்தம் தர அனுமதிக்கக்கூடாது. குழந்தைகளுக்கு பஞ்சினால் ஆன டெட்டி பியர் போன்ற பொம்மைகளை அதிக நேரம் விளையாடவும், அதைக் கட்டிப்பிடித்து தூங்கவும் அனுமதிக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com