குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இன்றைக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும் அதன் எடையைக் காட்டுவதற்கு பல கருவிகள் இருக்கின்றன. ஆனால், நம் முன்னோர்கள் குழந்தைகள் வளர வளர எடைக் கூடுகிறதா அல்லது குறைகிறதா? என்பதை அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை வைத்தே அளந்தார்கள்.
குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு நாளாக, நாளாக இறுகிக் கொண்டு போனால் குழந்தை எடைக்கூடி ஆரோக்கியமாக வளர்கிறது என்றும், அதுவே கயிறு தளர்ந்து கால் வழியே கீழே வந்து விழுந்துவிட்டால், குழந்தை எடைக்குறைந்து மெலிகிறது என்றும் கணித்தார்கள்.
மேலும், கிராமப்புரத்தில் நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்கு அரைஞாண் கயிற்றில் சேலை அல்லது வேட்டியை கட்டி முடிச்சிட்டு அதன் மூலம் நீச்சல் சொல்லிக் கொடுத்தார்கள். நீரில் மூழ்கிவிட வாய்ப்பிருந்தால் அதைப் பற்றி இழுக்க உதவியது அரைஞாண் கயிறு.
வயல்களில் வேலை செய்பவர்களை பாம்பு கடித்துவிட்டால், விஷம் உடல் முழுவதும் பரவாமல் இருக்க கட்டுப்போட கயிறு தேவைப்படும். அப்போது அரைஞாண் கயிறைப் பயன்படுத்தி இறுக்கக் கட்டி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வார்கள். எனவே, உயிர்க் காக்கவும் அரைஞாண் கயிறு பயன்பட்டிருக்கிறது.
இன்றைக்கு இருக்கும் Obesity பிரச்னையை தீர்க்க அரைஞாண் கயிறு உதவுகிறது. Abdominal obesity வருவதால் இடுப்பைச் சுற்றி கொழுப்பு படிவதால் இதயத்துக்கு சம்பந்தமான நோய் அதிகரிக்கும். அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் இந்த பிரச்னை வருவதற்கு முன்பே எச்சரிக்கை அடையலாம். ‘ஆயிரம் வந்தாலும் சரி, அரைஞாண் கயிறு அந்தாலும் சரி’ என்று ஒரு தமிழ் பழமொழி வழக்கத்தில் உண்டு.
இன்றைக்குக் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை சேமித்து வைக்க ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள். இந்த Stem cell குழந்தை வளர்ந்ததும் அவர்களுக்கு ஏற்படும் நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் தொப்புள் கொடியை காயவைத்து பொடியாக்கி அதை அரைஞாண் கயிற்றில் கட்டி விட்டார்கள். இது எதிர்காலத்தில் அவர்களுக்கு வரும் நோயிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் என்று செய்தார்கள். இத்தகைய சிறப்புமிக்க அரைஞாண் அணியும் பழக்கத்தை இன்றளவும் தமிழர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.