இரவில் ஏன் அவசியம் பல் துலக்க வேண்டும் என்று தெரியுமா?

Do you know why you should brush your teeth at night?
Do you know why you should brush your teeth at night?https://dentalresourceasia.com
Published on

காலையில் எழுந்ததும் அனைவரும் பல் துலக்குகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே இரவில் தூங்கும் முன் பல் துலக்குவதன் அவசியம் தெரிந்து அதை செயல்படுத்துகின்றனர். இரவில் அனைவரும் கட்டாயம் பல் துலக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

நாம் நாள் முழுவதும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். இரவு தூங்கத் தயாராகும்போது, பற்களுக்கு இடையில் நிறைய உணவுத் துகள்களும் பாக்டீரியாக்களும் தங்கிவிடும். இதை முறையாக சுத்தப்படுத்த வேண்டும்.

இரவில் பல் துலக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்:

1. வாயில் இருக்கும் உணவு மிச்சங்களில் இருந்து பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இது அமில உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. இது பல்லில் கறையாக படிவதோடு, பற்களை சேதப்படுத்துகிறது மற்றும் துவாரங்களுக்கு வழிவகுக்கிறது.

2. ‘சலைவா’ எனப்படும் உமிழ்நீர் அமிலங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. இருப்பினும், தூங்கும்போது நம் உடல் குறைந்த உமிழ்நீரை உற்பத்தி செய்கிறது. இதனால் வாய் வறண்டு போகும்.

3. பல் துலக்காமல் படுக்கைக்குச் செல்லும்போது இது பற்குழிவுகளை ஏற்படுத்துகிறது. நாளடைவில் பற்குழிவுகளை அதிகரிக்கிறது.

4. வாயில் தங்கிவிடும் பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தையும் தூண்டும். இதன் விளைவாக காலையில் எழுந்ததும் சகிக்க முடியாத துர்நாற்றம் ஏற்படுகிறது.

5. பற்களில் படியும் மஞ்சள் நிறக்கறைகள், சில நாட்களில் கருமை நிறமாக மாறி விடும். பின்பு அவை அழுத்தமான பற்கறையாக படிந்து விடும். சிமென்ட் கறை போல பற்களில் தங்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
கசகசாவில் உள்ள அளவற்ற ஆரோக்கியப் பயன்கள்!
Do you know why you should brush your teeth at night?

6. சில நேரங்களில் பற்களில் வீக்கமும் ஈறுகளில் இரத்தப்போக்கும் ஏற்படுகிறது. பின்பு பல் சிதைவுக்கு வழிவகுப்பதால், பல் மருத்துவரிடம் சென்றுதான் சிகிச்சை எடுக்க நேரிடும்.

7. பல் வலி பற்களுக்கு மட்டுமல்ல, மொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பல் துலக்குவது துர்நாற்றத்தை சமாளிக்கவும், பற்காறையை தடுக்கவும் உதவும். மேலும், காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க விரும்பினால் இரவில் பல் துலக்குவது அவசியம்.

இரவில் பல் துலக்குவது சலிப்பை ஏற்படுத்தலாம். அது ஒரு பழக்கமாக மாற நேரம் எடுக்கும். ஆனால், நன்மை பயக்கும் இந்தச் செயல் பல் பராமரிப்புக்கு பேருதவி புரிகிறது என்று உணர்ந்து கொண்டால், ஆர்வமாக இரவில் பல் துலக்கும் வழக்கம் கைகூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com