உங்க உடம்பு குண்டாகணுமா? Don't Worry... அதுக்கும் வழி இருக்கே!

Weight Gain
Weight Gain
Published on

உடல் எடையைக் குறைக்கும் வழிகளை ஒருபுற மக்கள் தேடும் அதே வேளையில் எடையை அதிகரிக்கும் வழிகளைத் தேடும் மக்களும் உள்ளனர். இதனால் ஒல்லியாக இருக்கும் பலர் தங்களின் உடல் எடையை அதிகரிக்க எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள் என ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். ஒருவரது உடல் எடை இந்த வழியில் அதிகரித்தால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கே ஆபத்தை உண்டாக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், எப்போதும் ஆரோக்கியமான வழியைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானதும் நல்லதும் கூட. 

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவும் பளுத்தூக்கும் பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக ஓவர்ஹெட் ப்ரஸ், செஸ்ட் ப்ரஸ், பெண்ட் ஓவர் ரோஸ், லஞ்சஸ், கர்ல்ஸ் மற்றும் ஸ்டிவ் டெட்லிப்ட் போன்ற பயிற்சிகளை ஒரு செட்டிற்கு 8-12 தடவை என தினமும் 4 - 5 செட் செய்ய வேண்டும். இந்த பளுத்தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, முடிந்த அளவு அதிக அளவிலான எடையைத் தூக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஆறு நாட்கள் செய்து, ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

எப்போதும் கலோரி அதிகமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நட்ஸ், உலர் பழங்கள், விதைகள், உலர்ந்த பெர்ரிப் பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவற்றை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிட வேண்டும். தினமும் உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

அன்றாடம் உண்ணும் உணவுகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரையில் வெற்றுக் கலோரிகள் உள்ளதால், அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுகளான உருளைக்கிழங்கு, சீஸ் சூப், கொழுப்பு இல்லாத பால் சேர்க்கப்பட்ட சூப், பால், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நல்ல ரிசல்ட் கொடுக்கும் சில Shoulder உடற்பயிற்சிகள்! 
Weight Gain

ஜூஸ் குடிப்பதாக இருந்தால், ஒரே ஒரு பழம் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸிற்கு பதிலாக பல பழங்களால் ஆன ஜூஸைத் (Mixed Fruit) தேர்ந்தெடுத்துக் குடிப்பது நல்லது. ஆப்பிள், பீச், பெர்ரி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் ஒன்றாக உட்கொள்ள ஏற்றது. ஜூஸ் வழியே கலோரிகளை அதிகரிக்க நினைத்தால், அவகேடோ, நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களைக் குடியுங்கள். ஜூஸ்களை அடிக்கடி குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் கிடைத்து, உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

டெசர்ட்டுகளை உண்பது ஆரோக்கியமானது மற்றும் இது கலோரியின் அளவை அதிகரிக்கவும் உதவும். யோகர்ட்டில் க்ரனோலா மற்றும் பழங்கள் சேர்த்து உண்பது, தவிடு மஃப்பின்கள் போன்றவை மிகவும் சிறப்பான டெசர்ட்டுகளாகும். உடல் எடையை அதிகரிக்க குறிப்பிட்ட அளவு கலோரிகளை எடுப்பது அவசியமாகிறது. எனவே எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், ஆரோக்கியமான உணவுகளின் மூலம் கலோரிகளின் அளவை அதிகரிக்க வேண்டும்.  

நற்பதமான பழச்சாறுகள் மற்றும் மாம்பழம் மில்க் ஷேக் போன்றவை உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானமாகும். எனவே முடிந்தால் தினமும் ஒரு மாம்பழ மில்க் ஷேக் குடியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com