கை விரல் நகங்கள் அடிக்கடி உடைகிறதா? ஜாக்கிரதை!

Care for brittle nails
Fingernails
Published on

ட்டச்சத்து குறைபாடு காரணமாக சிலருக்கு கை விரல் நகங்கள் பலமின்றி அடிக்கடி உடைந்து போகும் தன்மையுடையதாக இருக்கும். இந்தக் குறைபாட்டை போக்க உதவும் 9 ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நம் உடலின் மற்ற உறுப்புகளைப் போல் நகங்களுக்கும் நீர்ச்சத்து தேவை. போதுமான அளவு நீரேற்றமும் ஈரத்தன்மையும் இல்லையெனில் அவற்றில் கோடு போன்ற கீறல் ஏற்பட்டு உடைந்து போகும் வாய்ப்பு உண்டாகும். எனவே, ஒரு நாளைக்குத் தேவையான நீரை குறைவின்றிப் பருக வேண்டியது அவசியம்.

2. விரல்களில் ஜெல் அல்லது அக்ரிலிக் நகங்களைப் பொருத்துவது, இயற்கையான நகங்கள் சேதமடையவும் உரிந்து போகவும் வழிவகுக்கும். மேலும். நெயில் பாலிஷை உலரச் செய்ய உபயோகப்படுத்தப்படும் அல்ட்ரா வயலட் லைட்டானது சருமத்தில் கேன்சர் வரவழைக்கும் அளவுக்கு தீங்கானது.

3. சருமத்தின் மேற்பரப்பில் தங்கியிருக்கும் நோய்க் கிருமிகளை நீக்க நாம் சானிடைசர் உபயோகிப்பது உண்டு. இதிலுள்ள ஆல்கஹால் கைகளையும் நகங்களையும் வறட்சியடையச் செய்யும். இதனால் நகங்கள் உடைந்துவிடும் வாய்ப்பு உண்டாகும். எனவே, சானிடைசர் உபயோகிப்பதை குறைத்துக்கொள்வது நலம் தரும்.

4. மாய்ஸ்சரைஸிங் லோஷன் உபயோகிப்பது நகங்களை நீரேற்றத்துடன் வைக்க உதவும். மேலும். க்யூட்டிகிள் ஆயில் உபயோகிப்பதும் நன்மை தரும்.

5. பாத்திரங்கள் கழுவும்போதும் துணி துவைக்கும்போதும் கைகளில் கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது. ஏனெனில் டிட்டர்ஜென்ட் மற்றும் சோப்புகளில் உள்ள கெமிக்கல்கள் நகத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசையைப் பிரித்துவிட்டு நகங்கள் உடைவதற்கு வழி வகுக்கும்.

6. அதிக நேரம் விரல்களை நீருக்குள் வைத்திருப்பது நகங்களை மென்மைப்படுத்திவிடும். அதனால் அவை எளிதில் உடைந்துவிடும். இயன்றவரை தண்ணீரில் வேலை செய்யும் நேரத்தைக் குறைத்துக் கொள்வது நலம்.

இதையும் படியுங்கள்:
ஹம்மிங் பறவைகளின் சிறப்பியல்புகள்!
Care for brittle nails

7. தேவையான அளவு புரோட்டீன் சத்து நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். எனவே, லீன் மீட், மீன், முட்டை மற்றும் பீன்ஸ் உணவுகளை அடிக்கடி உட்கொள்வது நகங்களை உடையாமல் பாதுகாக்க உதவும்.

8. நகங்களை நீளமாக வளரவிடாமல் குறைவாக ட்ரிம் பண்ணி வைத்துக் கொண்டால் அவை அடிக்கடி உடைந்து போவதைத் தடுக்கலாம்.

9. அழகு நிலையங்களுக்குச் சென்று நகங்களை மானிக்யூர் (Manicure) செய்து கொள்ளும்போது அங்கு அவர்கள் உபயோகிக்கும் உபகரணங்ககள் முறையாக ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டவைதானா என்பதை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வது நலம் தரும். அங்கு உங்கள் நகங்கள் முறையான சேவையைப் பெறவில்லையெனில் அவை நாளடைவில் உடைந்து விட வாய்ப்புண்டு.

மேற்கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றி உங்கள் நகங்களை எப்பொழுதும் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com