இந்த ‘புத்தர் தலையில்’ இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

Health benefits of Seetha fruit
Health benefits of Seetha fruit
Published on

மெரிக்கப் பகுதியில் விளைந்த அனோனா வகையைச் சேர்ந்தது சீதளப்பழம் எனும் சீத்தாப்பழம். பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. உதாரணமாக, தைவான் நாட்டில் இதை, 'புத்தர் தலை’ என்கிறார்கள். ஆங்கிலத்ததில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்கிறார்கள். சில பழங்கள் பல நன்மைகளைத் தரும். அதிக ஒன்றுதான் சீத்தாப்பழம். இது மிகவும் ஆரோக்கியமானது. இந்தப் பழத்தில் வைட்டமின் B, C, மக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பல கனிமச் சத்தும் அடங்கியுள்ளன.உலகின் டாப் 5 பழங்களில் ஒன்று சீத்தாப்பழம். இது குளிர் காலத்தில் மட்டுமே கிடைக்கும் பழம். பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீத்தாப்பழமும் ஒன்று. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் சோடியமும் துணைப்புரிகின்றது. சீத்தாப்பழத்தை உண்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சீத்தாப்பழத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றம் மக்னிசீயம் இருப்பது இதயத்தின் தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.

சீத்தாப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. இது நம்முடைய உடலில் உள்ள நீர்த்தன்மையைச் சமநிலைப்படுத்தி மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளச் செய்கிறது. இது மூட்டு வலிகள், முழங்கால் வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணப் பழமாக விளங்குகிறது. கீழ்வாதம் போன்ற நோய்களின் அறிகுறிகளில் இருந்து தடுக்க உதவுகிறது. எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீத்தாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.

இதில் நீர்த்த நார்ச்சத்து உள்ளதால் அல்சர் நோய் இருப்பவர்கள் சீத்தாப்பழத்தை உண்ணலாம். காலையில் வெறும் வயிற்றில் இந்த சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை போக்கி குடல் புண்ணை குணப்படுத்தும். அதிக பித்தப் பிரச்னை இருப்பவர்கள் தினமும் ஒரு சீத்தாப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. மலச்சிக்கலை தவிர்க்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நியாசின் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குடலில் உள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் இது வெளியேற்றும்.

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிபோஃபிளேவின் சீத்தாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. ப்ரீரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமச் செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கிறது. வயதாவதால் ஏற்படும் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் தவிர்க்க சீத்தாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு விராட் கோலி கூறும் 5 ஆலோசனைகள்!
Health benefits of Seetha fruit

சீத்தாப்பழத்தில் நிறைய பிளவனாய்டுகள் இருக்கின்றன. இவை புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன. அதோடு, சீத்தாப்பழத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின் போன்றவை அதிகமாக இருக்கின்றன. சீத்தாப்பழத்தை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் வாயிலாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது. இதனால் புற்றுநோய் அபாயம் 90 சதவிகிதம் குறைவடைகின்றது.

சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது.இது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களைச் சமநிலையில் வைத்திருக்கச் செய்யும். அதிகப்படியான டென்ஷன், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்புடைய பிரச்னைகளைச் சரிசெய்ய வைட்டமின் பி உதவுகிறது. சீத்தாப்பழத்தின் இனிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு செய்யாது. பொதுவாக, பருவ கால பழங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று ஏற்றிவிடும். ஆனால், சீத்தாப்பழம் அப்படிச் செய்யாது. காரணம், அதில் உள்ள வைட்டமின் பி6.

சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும்போது சருமங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை உண்டாக்கும். இந்த வயதான தோற்றத்தை சரிசெய்து சருமத்தை இளமையாக வைத்திருக்க சீத்தாப்பழம் உதவும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும். ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com