குளிர்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் அவ்வளவுதான்!

Don't Eat these foods in winter.
Don't Eat these foods in winter.

மற்ற காலங்களோடு ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் கவனக்குறைவாக நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளால், இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது குளிர் எல்லா இடங்களிலும் அதிகமாக இருக்கிறது. இந்த சமயத்தில் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும். முடிந்தவரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவுகளைத் தவிருங்கள். இதனால் சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலைமை ஏற்படலாம்.  

குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் அதிக அளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும். அதுவும் குளிர் காலத்தில் உப்பின் தாக்கம் உடலில் அதிகம் இருக்கும் என்பதால், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உங்களுக்கு கேடு விளைவிக்கும். 

மைதா மாவில் தயாரித்த உணவுகள்: இப்போது தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுகள் மைதா மாவில் தான் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பரோட்டா போன்ற உணவுகள் இதயத்திற்கு உகந்தவை அல்ல. எனவே குளிர்காலத்தில் மைதா பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.   

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெய்: ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், அதன் தன்மை மாறி உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயமாக இது பார்க்கப்படுகிறது. எனவே குளிர்காலங்களில் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணையை பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

இதையும் படியுங்கள்:
விருந்துக்குப் பின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதா?
Don't Eat these foods in winter.

ஐஸ்கிரீம்: ஐஸ்கிரீம் பெரும்பாலும் தாவர எண்ணெய் கொழுப்பிலிருந்து  தயாரிக்கப்படுகிறது. மேலும் சில ஐஸ்கிரீம்களில் பழச்சாறை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பால் பொருட்களில் செய்யப்படும் ஐஸ்கிரீம்களில் கொழுப்பு அதிகம் இருக்கும். இதில் சர்க்கரையும் அதிகம் உள்ளதால் குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 

அதிக இனிப்பு கலந்த உணவுகள்: குளிர்காலங்களில் அதிக சர்க்கரை சேர்க்கும் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதிரடியாக உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து, அதன் தாக்கத்தை வீரியப்படுத்தும். எனவே குளிர்காலங்களில் அதிக இனிப்பு கொண்ட உணவுகளைத் தவிருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com