கோடை வெயிலுக்கு கருப்புக் குடையை பயன்படுத்த வேண்டாம்: ஏன் தெரியுமா?

Don't use a black umbrella for summer sun: you know why?
Don't use a black umbrella for summer sun: you know why?https://tamil.oneindia.com
Published on

கோடைக்காலத்தின் கடும் வெயிலில் நடந்து செல்லும்போது பலரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கருப்புக் குடை பிடித்துச் செல்வதை பார்த்திருப்போம். கருப்புக் குடை ஓரளவுக்கே சூரியனின் நேரடி வெப்பத்தைத் தடுக்கிறது. தவிர, இதனால் உடலுக்கு மறைமுகமாக கெடுதியே விளைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

கருப்பு என்பது ஒரு நிறம் கிடையாது. ஒன்றுமே இல்லாத இடம் கருப்பாக இருக்கும். VIBGYOR என்று அழைக்கப்படும் வைலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களுமே இல்லாத ஒன்று கருப்பாக இருக்கும். அந்த நிறத்தின் மீது எந்த நிற ஒளிக்கதிர்கள் பட்டாலும் கருப்பு நிறம் அவற்றை உட்கிரகித்துக்கொள்ளும். ஆகவேதான், சூரியனிடமிருந்து வரும் வெண்ணிற ஒளிக் கதிர்களை கருப்பு நிற துணியைக் கொண்ட குடைகள் தம்மிடம் வாங்கித் தங்க வைத்துக் கொள்ளும்.

அது மட்டுமின்றி, கருப்புக் குடை தன்னிடம் கிரகித்து வைத்துள்ள வெப்பம் கதிர் வீசல் முறையில் அந்தக் குடையின் கீழ் இருப்பவரையும் கடுமையாகத் தாக்கும். இதனால்தான் வெயிலில் கருப்பு நிற குடைகளை பிடித்துச் செல்பவர்களுக்கு அதிகமாக வியர்ப்பதைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
நினைவாற்றல் மூளைக்கு மட்டுமல்ல; தசைகளுக்கும் உண்டென்பது தெரியுமா?
Don't use a black umbrella for summer sun: you know why?

இந்த வெப்பத்தினால் உடலில் கோடைக் கட்டிகள், சரும வியாதிகள் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. வெண்மை என்பதும் ஒரு நிறமன்று. அது மேலே கண்ட ஏழு வண்ணங்களின் மொத்தத் தொகுப்பு ஆகும். அதனால் குடையின் மீது வெண்மை நிற துணி உள்ளது போன்ற குடைகளை வெயிலில் இருந்து தப்பிக்கப் பிடித்து சென்றால், அந்த வெண்மை நிறம் தன் மீது படும் வெப்ப சூரிய ஒளிக் கதிர்களை தான் கிரகித்துக்கொள்ளாமல், மேல் நோக்கி திருப்பி அனுப்பி விடும்.

எனவே, வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள கருப்பு நிற குடைகளை விட, வெண்மை நிறக் குடைகளையோ அல்லது பல நிறம் கொண்ட குடைகளையோ எடுத்துச் சென்று வெயிலின் கடும் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com