குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்... ஜாக்கிரதை!

Colon Cancer
Early Signs of Colon Cancer.
Published on

குடல் புற்றுநோய் என்பது இந்தியாவில் ஆண்களுக்கு இரண்டாவது மற்றும் பெண்களுக்கு மூன்றாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இதை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்தப் பதிவில் குடல் புற்றுநோயின் பொதுவான ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி பார்க்கலாம். 

குடல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள்: 

  • குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் தெளிவில்லாமல் இருக்கும். அது பிற நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இருப்பினும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் என்று பார்க்கும்போது: 

  • மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இரண்டு வாரத்திற்கு மேல் நீடித்தால் அது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். 

  • மலத்தில் சிவப்பு, ரத்தக்கரை அல்லது கருப்பு நிற ரத்தம் காணப்படுவது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். 

  • அதிக வயிற்று வலி, வீக்கம் அல்லது வயிற்றில் பிடிப்பு போன்ற தொடர்ச்சியான வயிற்று அசௌகரியம், இதன் தொடக்கநிலை அறிகுறிகளாகும்.  

  • திடீரென ஏற்படும் எடை இழப்பு, குறிப்பாக குறுகிய காலத்தில் இது ஏற்பட்டால், மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. 

  • மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் நீங்கள் எப்போதும் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்வீர்கள். 

  • பசியின்மை அல்லது கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு போன்ற பசியியல் மாற்றங்கள் குடல் புற்றுநோயின் அறிகுறிகளாகும். 

  • மலச்சிக்கல், மல அளவு மற்றும் வடிவத்தில் மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டால் ஜாக்கிரதையாக இருங்கள். 

குடல் புற்றுநோய்க்கான காரணங்கள்: 

பெரும்பாலான குடல் புற்றுநோய் நோயாளிகள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாகவே இருக்கின்றனர். எனவே வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் குடல் புற்றுநோய் இருந்தால் உங்களுக்கு அது ஏற்படும் ஆபத்து அதிகம். 

குடல் பாலிப்கள் சிறிதளவு வளர்ச்சியடைந்து காலப்போக்கில் அவை புற்றுநோயாக மாறலாம். மேலும் அதிக காலம் அல்சர் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. 

புகைப்பிடித்தல் அதிக மது அருந்துதல், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பல வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்கள், குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.  

இதையும் படியுங்கள்:
டைவர்டிகுலிடிஸ் எனும் இரைப்பை குடல் நோயைத் தடுப்பது எப்படி?
Colon Cancer

தடுப்பு நடவடிக்கைகள்: குடல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். குறிப்பாக, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை குறைவாக உட்கொள்ளவும். 

அடுத்தது, எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். வாரத்தில் நான்கு நாட்களாவது தீவிர உடற்பயிற்சி செய்யுங்கள். இத்துடன் மது, புகை போன்ற எந்த கெட்ட பழக்கமும் வேண்டாம். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வழக்கமான குடல் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

குடல் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்தக் கூடியது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு அறிகுறிகளையும் நீங்கள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com