
நீங்கள் வேலை பளுவினால் சோர்வாக இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது, தினமும் 1 ஆரஞ்சு பழம் உட்கொள்வது மன அழுத்தத்தை 20% குறைக்கும், என்று ஆராய்ச்சியில் இருந்து தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. அது அமைதியைப் பறித்து, உதடுகளில் உள்ள புன்னகையைக் கெடுக்கிறது.
மன அழுத்தம் என்பது எந்தவொரு நபரையும் சோகப் புதைகுழியில் தள்ளும் ஒரு மனநிலை. இந்த மன அழுத்தம் சிந்தனை, சாப்பிடுதல், குடித்தல், தூங்குதல் மற்றும் வேலை செய்யும் முறையையும் பாதித்துள்ளது.
மனச்சோர்வுக்கு பொதுவாக, பேச்சுச் சிகிச்சை, மருந்து அல்லது இரண்டையும் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
*தொடர்ச்சியான சோகம் அல்லது வெறுமை உணர்வு
*மகிழ்ச்சியாக இல்லாதது.
*சோர்வு மற்றும் ஆற்றல் குறைவு
*அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குதல்
*அதிகமாகச் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது
*தன்னை ஒரு தோல்வியாளராகக் கருதுதல்.
*கவனம் செலுத்த இயலாமை மற்றும் எரிச்சல்
*தலைவலி, உடல் வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள்...
இவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்கள் உடலிலும் நடத்தையிலும் இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக உங்கள் வாழ்க்கை முறையையும் உணவையும் மாற்றவும். உணவில் சில உணவுகளை உட்கொள்வது மனச்சோர்வுக்குச் சிகிச்சையளிக்க உதவுகிறது.
தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மருத்துவப் பயிற்றுவிப்பாளரும் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மருத்துவருமான ராஜ் மேத்தா தலைமையிலான ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது ஒரு நபரின் மனச்சோர்வு அபாயத்தை 20 சதவீதம் குறைக்கலாம். சிட்ரஸ் பழங்கள் மனித குடலில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியாவான ஃபேகலிபாக்டீரியம் பிரஸ்னிட்ஸி (எஃப். பிரஸ்னிட்ஸி) வளர்ச்சியைத் தூண்டுவதால் இது நிகழலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே ஆராய்ச்சியின் படி, தினமும் சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்கும்.
சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆரஞ்சு ஒரு மனநிலை ஊக்கியாகும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன, மேலும் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.
இதை உட்கொள்வது கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும் .
தினமும் ஆரஞ்சு சாப்பிடுவது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
இது இரத்த நாளங்களைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் வைட்டமின் சி குறைபாட்டைப் பூர்த்திச் செய்யலாம்.
இனியாவது தினமும் ஒரு ஆரஞ்ச் சாப்பிடுங்கள்.