உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

Healthy foods
Healthy foods
Published on

ன்கு பசி எடுத்தவுடன் சாப்பிடுவதுதான் சரியானது. பசி எடுக்காத சமயத்தில் யார் வற்புறுத்தினாலும் உணவை உட் கொள்ளாதீர்கள். சரியாக வேகாத உணவும் அதிகப்படியாக குழைந்து வெந்த உணவும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. காய்கறிகளை அதிகம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் வெளியேறிவிடும். சாதம் வடிக்கும்போது நன்றாக வேகாமல் இருந்தால் வயிற்று வலி வரும்.

கீரைகளை அதன் பசுமை நிறம் மாறாமல் வேக வைக்க. கீரையை திறந்து வைத்தே வேக விட வேண்டும். கீரை வெந்த நீரை கொட்டாமல் கீரையுடன் சேர்த்து மசித்து சமைப்பதுதான் ஆரோக்கியம். இயற்கை உபாதைகள் ஏற்படும்போது அதை அடக்கிக் கொண்டு உணவு உட்கொள்வதை தவிர்ப்பது அவசியம்.

உணவை அதிக அளவில் சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுட வைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவ்வப்போது தினம் ஃப்ரஷ்ஷாக சமைத்து உண்பதே ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் கிடைப்பதற்கான வழி.

சூடான உணவு எடுத்துக்கொள்ளும் சமயம் குளிர்ச்சியான ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இப்படி இரண்டும் கலந்து சாப்பிட்டால் ஜீரணக்கோளாறு ஏற்படும். மைதாவில் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, பூரி, பப்ஸ், சமோசா போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளான சிப்ஸ், நூடுல்ஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது உடலில் பிரச்னைகளை உண்டுபண்ணும்.

இதையும் படியுங்கள்:
இந்தக் கலைக்கு இத்தனை சிறப்பா?
Healthy foods

அசைவ உணவுகளில் இருக்கும் புரதம் சரியாக ஜீரணம் ஆகாமல் நச்சுக்களாக மாறும். அவை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். எனவே, அசைவ உணவுகளுடன் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

காபி, டீ போன்றவை நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். பார்கின்சன் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். ஆனால், அதிக அளவில் காபி, டீ அருந்துவது நம் இதய துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதற்றம், சோர்வு ஆகியவை உண்டாகும்.

ஆஸ்டியோபொரோசிஸ், பல புற்று நோய்கள் வளர்வதற்கும், சர்க்கரை நோய்க்கும் வெள்ளை சர்க்கரைதான் காரணமாகும். எனவே, இதனைத் தவிர்த்து பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரையை மாற்றாகப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com