நோய் எதிர்ப்பு சக்தியை 'சூப்பர் சார்ஜ்' செய்ய வேண்டுமா? தினமும் இதை சாப்பிடுங்கள்!

Boost immunity
Boost immunity
Published on

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இப்படி வீட்டில் சிம்பிளாக செய்துப் பாருங்கள். முதலில் கடாயில் தீயை குறைவாக வைத்துக் கொண்டு ராகி 1 கப்பை சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். ராகியில் பாலை விட அதிக கேல்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக மூட்டு வலி, முதுகுவலி பிரச்னை இருப்பவர்கள் கேல்வரகை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நல்ல பலன் கிடைக்கும்.

இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகை, மலச்சிக்கலை தடுக்கும். நன்றாக வறுப்பட்டதும் வேறு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். இப்போது அதே கடாயில் 1 கப் அளவிற்கு கம்பு சேர்த்து அதையும் பொறுமையாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். கம்பு உடல் சூட்டை குறைத்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். இதில் அதிகமாக வைட்டமின் இருப்பதால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்றாக வறுத்தெடுத்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து கடாயில் கருப்பு உளுந்து 1 கப் சேர்த்துக் கொள்ளுங்கள். கருப்பு உளுந்தை தோலோடு சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும். இதுவும் நிறம் மாறும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும். ஹார்மோனுக்கு மிகவும் நல்லது. அதனால் பெண்கள் இதை தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம். நன்றாக வறுப்பட்டதும் அதனுடன் ஏலக்காய் 5 சேர்த்து வறுக்கவும்.

இப்போது வறுத்து வைத்திருக்கும் பொருட்களை தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இப்போது ஒரு கப் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொண்டு ஏழு கப் அளவு தண்ணீரை அதில் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிட்டுக் கொள்ளவும்.

நன்றாக கொதித்த பிறகு சற்று கட்டியான பதத்திற்கு வரும். அதில் துருவிய தேங்காயை சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இதில் 1 1/2 கப் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கலந்துக் கொள்ளவும். இதை தினமும் காலையில் 1 கப் குடிப்பது உடம்புக்கு மிகவும் நல்லது. 

இதையும் படியுங்கள்:
பயன் தரும் பாட்டி வைத்தியம்: சந்தன எண்ணெய்க்கு இப்படி ஒரு தன்மையா?
Boost immunity

இன்னொரு விதமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் பாலை எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு டம்ளரில் இனிப்பிற்கு 1 1/2 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் தயாரித்து வைத்திருக்கும் மாவை 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது கொதிக்க வைத்த பாலை இதில் ஊற்றி கலந்துவிடவும். காலையில் பிரேக் பாஸ்ட்டுக்கு பதில் இந்த கஞ்சியை குடிக்கலாம். நீங்களும் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com