அமோனியா வாயுவை சுவாசித்தால் என்ன ஆகும் தெரியுமா? 

Effects of breathing Ammonia Gas on people.
Effects of breathing Ammonia Gas on people.

சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உர ஆலையான கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால், அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அமோனியா வாயு என்றால் என்ன? அதை சுவாசிப்பதால் மக்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

அமோனியா வாயு என்றால் என்ன? 

அம்மோனியா வாயு என்பது நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆனது. NH3 என்ற வேதியல் ஃபார்முலாவில் இருக்கும் அம்மோனியா, கடுமையான மணம் கொண்ட, நிறமற்ற ஒரு ரசாயனமாகும். பொதுவாகவே தொழிற்சாலைகளில் இதன் பயன்பாடு அதிகம் இருக்கும். இருப்பினும் அம்மோனியா வாயுவை மனிதர்கள் உள்ளிழுக்கும்போது ஏற்படும் விளைவுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மண், காற்று மற்றும் நீரில் இயற்கையாக காணப்படும் அமோனியா, தொழிற்சாலைகளில் Haber-Bosch முறையில் நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனை, அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் இணைத்து உருவாக்கப்படுகிறது. குறிப்பாக உர உற்பத்தி மற்றும் ஏசி ஆலைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

அமோனியாவை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் போது பாதுகாப்பானது என அங்கீகரிக்கப்பட்டாலும், அதன் வாயுவை மனிதர்கள் சுவாசித்தால் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

  1. முதற்கட்டமாக அமோனிய வாயுவை ஒருவர் சுவாசிக்கும்போது, அவருடைய சுவாச குழாய் பாதிக்கப்பட்டு, எரிச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். 

  2. அடுத்தகட்டமாக கண் எரிச்சல், கண் சிவந்து போதல், நீண்ட நேரம் அமோனியா வாயுவில் இருக்கும்போது கண்ணையே இழக்கும் அபாயம் கூட ஏற்படலாம். 

  3. நீர் நிலையில் உள்ள அமோனியா அல்லது அதன் வாயு ஒருவர் மீது படும்போது, தோல் எரிச்சலை ஏற்படுத்தி காயங்களை ஏற்படுத்தும். 

  4. நீண்ட நேரம் அமோனியா வாயுவை சுவாசித்தால் நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு, நுரையீரலில் அதிகப்படியான திரவம் குவிந்து கடுமையான சுவாச பாதிப்புக்கு வழிவகுக்கும்.

  5. அமோனியாவை சுவாசித்தவரை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி விட்டாலும், நீண்டகால அடிப்படையில் சுவாச பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை அதன் பாதிப்பு இருக்கும்.  

இதையும் படியுங்கள்:
போபால் விஷவாயு விபத்து - கூடுதல் இழப்பீட்டுத் தொகை கோரிய உச்சநீதிமன்ற சீராய்வு மனு தள்ளுபடி!
Effects of breathing Ammonia Gas on people.

எண்ணூரில் உர ஆலையில், அமோனியா வாயுவை பதப்படுத்துவதற்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் போனதே இந்த வாயுக்கசிவு விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியைக் கேட்கும்போது போபால் விஷவாயு தாக்குதல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com