50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை அடைகின்றனர். இந்த காலகட்டத்தில் உடல் செயல்பாடுகள் மெதுவாகி, உடலில் பல மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்களை சமாளிக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தவும் சரியான ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். குறிப்பாக, சில குறிப்பிட்ட வைட்டமின்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானவை. அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவசியமான 7 விட்டமின்கள்:
வைட்டமின் டி: வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் ஒரு முக்கியமான வைட்டமின். இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. வயதாகும்போது உடலில் விட்டமின் டி உற்பத்தி குறையலாம். இதனால், எலும்பு முறிவு, எலும்பு இழப்பு மற்றும் எலும்பில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வைட்டமின் பி12: வைட்டமின் பி12, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. வயதாகும்போது உடலில் வைட்டமின் பி12 உறிஞ்சுதல் குறைகிறது. இதன் குறைபாடு காரணமாக சோர்வு, மறதி, மனசோர்வு, நரம்புப் பிரச்சனைகள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
கால்சியம்: கால்சியம் எலும்புகளுக்குத் தேவையான முக்கியமான கனிமம். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கால்சியம் சத்து குறைவதால், எலும்புகள் பலவீனமடையும். எனவே, கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியம். இது எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்பை தடுக்க உதவும்.
வைட்டமின் ஈ: வைட்டமின் ஈ ஒரு சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. வயதாகும்போது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் அதிகரிக்கும். இதை குறைப்பதற்கு விட்டமின் ஈ உதவும்.
வைட்டமின் சி: வைட்டமின் சி மற்றொரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பிரச்சனை இருப்பதால், விட்டமின் சி கொண்ட உணவுகள் அதை மேம்படுத்த உதவும்.
பொட்டாசியம்: பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதை ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது, இதயம் தொடர்பான பாதிப்புகளைத் தடுக்க உதவும்.
மக்னீசியம்: மக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. மேலும், இது ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். வயதாகும்போது மக்னீசியம் குறைபாடு ஏற்படக்கூடும் என்பதால், மக்னீசியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
50 வயதைக் கடந்துவிட்டாலே உங்களது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். மேலே குறிப்பிட்ட வைட்டமின்களை சரியான அளவில் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். இருப்பினும், எந்த ஒரு புதிய விட்டமின்கள் அல்லது உணவுப் பழக்கத்தை தொடங்குவதற்கு முன்பும், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று தொடங்குவது நல்லது.