ஆரோக்கியத்தை அள்ளித் தரும் Jungle Jalebi (கொடுக்காய்ப் புளி)! 

Jungle Jalebi
Jungle Jalebi
Published on

Jungle Jalebi எனப்படும் கொடுக்காய்ப் புளியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது பொதுவாகவே காடுகளிலும், சாலை ஓரங்களிலும் அதிகமாக இருப்பதால் இதனை ஜங்கிள் ஜிலேபி என அழைப்பார்கள். இப்போதெல்லாம் கொடுக்காய் புளி மரங்களைப் பார்ப்பது அரிதாக உள்ளது. இருப்பினும் பழக்கடைகளில் கொடுக்காய்ப் புளியை நாம் அதிகமாகப் பார்க்க முடிகிறது. எனவே அவற்றை வாங்கி சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். 

கொடுக்காய்ப் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:  

  • ஊட்டச்சத்துக்கள்: கொடுக்காய்ப் புளியில் அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதில் விட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. மேலும் இதில் விட்டமின் ஏ, விட்டமின் ஈ, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளதால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பெரிதளவில் உதவும். 

  • செரிமான ஆரோக்கியம்: செரிமான ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் கொடுக்காய்ப் புளியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வழக்கமான குடல் இயக்கங்களைப் பராமரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, செரிமான அமைப்பை மேம்படுத்தும். இதில் உள்ள பைபர் உள்ளடக்கம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. 

  • எடை நிர்வாகம்: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அல்லது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க விரும்புபவர்களுக்கு கொடிக்காய்ப் புளி பெரிதளவில் உதவும். இதில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை நிர்வகிக்க விரும்புபவருக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது. பைபர் உள்ளடக்கம் அதிக உணவு உட்கொள்வதைத் தடுத்து ஒட்டுமொத்த கலோரி அளவையும் குறைக்கிறது. 

  • அழற்சி எதிர்ப்பு பண்புகள்: கொடுக்காய்ப் புளி ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், பல்வேறு சுகாதார பாதிப்புகளுக்கு எதிராகப் போராடுகிறது. இதில் இருக்கும் ஆல்கலாய்டு மற்றும் பிளாவனாய்டு போன்ற கலவைகள் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடவும், தொற்றுக்களைத் தடுக்கவும் உதவுகின்றன. 

இதையும் படியுங்கள்:
இந்த 5 Dark Psychology தந்திரங்களில் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள்! 
Jungle Jalebi
  • ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு: ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் கொடிக்காய்ப் புளி பெரிதளவில் உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது நீரிழிவு நோயின் தீவிரத்ன்மையைக் குறைக்கிறது. இப்பழத்தின் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் அதிக நார்ச்சத்து ஆகியவை ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. 

  • சரும ஆரோக்கியம்: இதில் இருக்கும் அதிக விட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சரும நெகழ்ச்சித்தன்மைக்கு உதவுகிறது. இதன் மூலமாக சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து, எப்போதும் இளமையான தோற்றத்தைப் பராமரிக்க உதவுகிறது. இப்பழத்தின் ஆக்சிஜனேற்ற பண்புகள் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவி, இயற்கையான முகப்பொலிவைக் கொடுக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com