பல் வலியை பட்டுனு விரட்ட நச்சுனு சில டிப்ஸ். 

Toothache.
Toothache.

உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் அதை ஓரளவுக்கு பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பல்வலி ஏற்பட்டால் நம்மால் தாங்க முடியாது. என்னதான் பல வைத்தியம் செய்தாலும், அவ்வளவு எளிதில் பல்வலியை குறைக்க முடியாது. ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே இயற்கையாக பல் வலியை குறைக்க முடியும். இருப்பினும் நீண்ட நாட்கள் பல்வலி இருந்தால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது. 

உப்புநீர்: வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கும்போது, வாயில் உள்ள தேவையில்லாத பொருட்கள், கிருமிகள் எல்லாம் நீங்கிவிடும். இதன் மூலமாக தொண்டைப்புண், பல்வலி போன்றவை குணமாகும். ஆனால் வாய் கொப்பளிக்கும் போது உப்பு நீரை குடித்து விடாதீர்கள். 

பூண்டு சாப்பிடுங்கள்: பூண்டில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. எனவே பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை வாயில் உள்ள கிருமிகளை அழிக்கும். பல்வலி சமயங்களில் பூண்டை நசுக்கி, அதில் கொஞ்சம் உப்பு கலந்து வலி இருக்கும் பல்லில் வைத்தால் வலி சீக்கிரம் குறையும். 

கற்றாழை: கற்றாழை ஜெல் பொதுவாகவே காயங்களை விரைவில் ஆற்ற பயன்படுகிறது. இதை பயன்படுத்தி பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை, பற்சொத்தைக்கு காரணமாக இருக்கும் கிருமிகளை அழிக்கும். பல் வலி அதிகமாக இருந்தால் கற்றாழை ஜெல்லை அந்த பல்லில் வைத்து லேசாக தேயுங்கள். 

இதையும் படியுங்கள்:
பல் ஈறுகளில் திடீரென இரத்தக் கசிவு ஏற்பட்டால் என்ன செய்யலாம்?
Toothache.

ஐஸ் ஒத்தடம்: பல்வலி சமயங்களில் சிலருக்கு தாடைகள் வீங்கிவிடும். குறிப்பாக ஈறுகள் வீங்கி இருக்கும்போது ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும் வீக்கமும் குறையும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் வைத்து எந்த பகுதியில் வலி இருக்கிறதோ அங்கு லேசாக ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்தால் சில நிமிடங்களில் வலி குறையத் தொடங்கும். 

கிராம்பு: பல் வலிக்கு அருமருந்தாக கிராம்பு பார்க்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிராம்பு எண்ணெய் கிடைக்கும். அதை பல்வலி உள்ள இடத்தில் தடவலாம். அல்லது முழு கிராம்பையும் நேரடியாக வாயில் மென்று அந்த சாற்றை பல்வலி இருக்கும் இடத்தில் படுமாறு செய்தால் 15 நிமிடங்களில் பல்வலி குறைய ஆரம்பிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com