ஒவ்வொரு மனிதரின் உடல் நிலையும் மற்றவரில் இருந்து வேறுபட்டு இருக்கும். சிலருக்கு அடிக்கடி உடல் சோர்வு, மயக்கம், களைப்பு தோன்றும். கீழ்கண்டவைகளில் ஏதேனும் ஒன்று அதற்கான காரணமாக இருக்கக்கூடும்.
1. இரத்த சோகை: உடலில் இரத்தத்தை உருவாக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அது மயக்கம், தலை சுற்றல் போன்றவற்றைக் கொண்டு வரும்.
2. சளி, தும்மல்: சிலருக்கு தூசி, ஒட்டடை மற்றும் அழுக்கு, அலர்ஜி ஏற்படுத்தி, அடிக்கடி சளி பிடித்து தும்மல் வரும். இவர்களுக்கு அடிக்கடி மயக்கம் வரும்.
3. சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது: இரும்புச்சத்து, போலிக் ஆசிட், விட்டமின் பி12 போன்றவை இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல் விரைவில் சோர்வடைந்து விடும்.
4 மனச்சோர்வு கவலை: துக்கம், கவலை, எதிர்காலத்தை நினைத்து பயம் போன்ற மன ரீதியான உணர்வுகளும் உடலை பலகீனமாக்கும். சரியாகத் தூங்காதது கூட உடல்சோர்வு, மயக்கத்தை உண்டாக்கும்.
சோர்வு, களைப்பு மற்றும் மயக்கத்தை சரி செய்யக்கூடிய உணவுகள்:
1. வெஜிடபிள், ப்ரூட் சேலட்: ஒரு கிண்ணம் நிறைய புதிதாக வாங்கிய காய்கறிகள் மற்றும் பழங்களில் உருவாக்கிய கலவை உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் கொடுக்கும். மனதிற்கும் உற்சாகம் தரும்.
2. பதப்படுத்தாத உணவு வகைகள்: பர்கர், பாஸ்தா, பிரெஞ்ச் ப்ரைஸ் வகைகள், ரெடி டு ஈட் ஸ்நாக்ஸ் வகைகள் போன்றவை ஆரோக்கியத்தை கெடுக்கும். இவற்றில் எந்தவிதமான சத்துக்களும் கிடையாது. இவற்றில் உள்ள அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரைகள் உடலின் சக்தி, ஆற்றல் மற்றும் சத்துக்களை உறிஞ்சி விடுகின்றன. இதை தவிர்த்து விடுவது அவசியம். நார்ச்சத்துமிக்க முழு தானியங்கள், பிரவுன் பிரட் போன்றவை உண்ணலாம்.
3. கிரீன் டீ: கிரீன் டீ, மில்க் ஷேக், ஸ்மூத்தீஸ் போன்றவை உடலுக்கு நல்ல எனர்ஜியை தரும்.
4. உலர் பழங்கள்: பாதாம், வால்நட், சியா விதைகள், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவை களைப்பையும் சோர்வையும் விரட்டி அடிக்கும்.
5. புரதம்: உடலுக்கு சக்தியை தருவதுடன் களைப்பை எதிர்ப்பதில் முக்கியப் பங்கு புரதத்திற்கு உண்டு. பீன்ஸ், வெண்ணை, டோப்பு, முளைக்கட்டிய பாசிப்பயிறு மற்றும் சுண்டல் வகைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. இவை உடலை ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் வைக்கும்.
6. காளான்கள்: இவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் வைட்டமின்கள் போன்றவை உடல் செல்களுக்கு உற்சாகம் அளித்து களைப்பை விரட்டி அடிக்கின்றன. இவற்றை சான்ட்விச்சுக்களிலோ, ஸ்நாக்ஸ் ஆகவோ, சாலடுகளிலோ கலந்து உண்ணலாம்.
7. வாழைப் பழங்கள்: கலைப்பைப் போக்குவதில் முக்கியப் பங்கு வாழைப்பழத்துக்கு உண்டு. பொட்டாசியம் வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த வாழைப்பழம் விலை மலிவானதும் அதிக ஆற்றலை அளிக்கக் கூடியதும் ஆகும். இதை மில்க் ஷேக்கிலும் ஸ்மூத்தீஸ் ஆகவும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
8. பீன்ஸ் வகைகள்: இதில் உள்ள நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதம் போன்றவை உடலுக்கு மிகுந்த நன்மையை தருகின்றன.
9. தண்ணீர்: எப்பொழுதெல்லாம் களைப்பாக உணருகிறோமோ, அப்போதெல்லாம் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதுடன், கலோரிகள் அற்றது. தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.