பெருஞ்சீரகம் Vs சின்ன சீரகம்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

Fennel Vs Cumin
Fennel Vs Cumin
Published on

நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் சின்ன சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். இருப்பினும், தனித்தனியாக இவற்றிற்கு என்ன பயன்கள் உள்ளது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பெருஞ்சீரகத்தில் சற்று இனிப்பு சுவை மற்றும் நல்ல மணம் இருக்கும். சின்ன சீரகம் சற்று கசப்பு சுவையுடன் இருக்கும். பெருஞ்சீரகத்தை இனிப்பு பண்டங்களில் அதிகம் சேர்ப்பார்கள். மசாலாக்கள் தயாரிப்பில் சீரகம் முக்கியப் பொருளாக சேர்க்கப்படுகிறது.

சீரகம் உணவில் சுவைக்காக மட்டும் இல்லாமல், எண்ணற்ற ஆரோக்கிய பலன்களைக் கொண்டிருக்கிறது. சீரகம்  செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உடல் எடைக் குறைக்க உதவுகிறது.

பெருஞ்சீரகத்தின் விதை மற்றும் எண்ணெய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் Alkaline properties உள்ளதால் வயிற்றில் உருவாகும் ஆசிட்டை சமன் செய்து அசிடிட்டி பிரச்னைகளைப் போக்குகிறது. மேலும், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்னை போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது.

சீரகத்தில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. தினமும் சீரகத்தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் உள்ள PH level ஐ சரிசெய்ய உதவுகிறது. மேலும், அஜீரணம், அசிடிட்டியை போக்குகிறது. தினமும் காலை சீரகத்தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் எடை குறைவதாக சொல்லப்படுகிறது. 1 டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி சீரகத்தை இரவு ஊற வைத்து காலையில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பெருஞ்சீரகத் தண்ணீரை அருந்துவதால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வராது. இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்வதால், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
Chia seeds Vs Sabja seeds: உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?
Fennel Vs Cumin

இந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. ஒரு டம்ளர் தண்ணீரில் பெருஞ்சீரகத்தை இரவே ஒரு தேக்கரண்டி ஊற வைத்து காலை நன்றாக காய்ச்சி குடிக்கலாம். சீரகம், பெருஞ்சீரகம் இரண்டையுமே தண்ணீரில் சேர்த்து ஊறவைத்து அருந்தலாம். இது சிறந்த Detoxifier ஆக செயல்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com