இரத்த சோகை பிரச்னைக்கு சூப்பர் நிவாரணம் தரும் அத்திப்பழம்!

Figs provide super relief for anemia
Figs provide super relief for anemiahttps://tamil.oneindia.com
Published on

டவுள் நமக்கு அளித்த எண்ணற்ற வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் அத்திப்பழம். மற்ற பழங்களை விட இதில் நான்கு மடங்கு தனிமச் சத்துக்கள் உண்டு. மற்ற காய்கறிகள், கொட்டைகள் மற்றும் பாலை விட இது அதிக கால்சியம் கொண்டது. கலோரி என்று பார்த்தால் ஒரு அத்திப்பழத்தில் 20 முதல் 40தான். எனவே, இதை ‘பெர்ஃபெக்ட் புட்’ என்கிறார்கள்.

அத்திப்பழத்தில் மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை விட அதிகளவில் நார்ச்சத்தும், கால்சியமும் உள்ளன. வாழைப்பழத்தை விட 80 சதவீதம் அதிகம் பொட்டாசியம் சத்து உள்ளது. மற்ற பழங்களை விட அதிகப்படியான மாங்கனீசும், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும் 4 மடங்கு அதிகமாக உள்ளது. அத்திப்பழத்தை ‘இஸ்ரேல் ஆப்பிள்’ என்கிறார்கள். இது தவிர, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்ட நோயை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ஒரு கிராம் அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வெண் புள்ளிகள், வெண் குஷ்டம், சருமத்தின் நிறம் மாற்றம் ஆகியவை குணமாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்திப்பழத்தை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசி வர அவை நாளடைவில் மறையும்.

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்திப்பழம். இது சித்த மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அத்திக்காய், அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

அதிக அளவு நார்ச்சத்து, ஜிங்க், மக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இதனை தினசரி சாப்பிடுவதனால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது. அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

அத்திப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகள் நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. பித்தத்தினை சரி செய்ய அத்திப்பழம் பெரிதும் பயன்படுகிறது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.

தினமும் இரண்டு அத்திப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இரத்தம் அதிகரிப்பதற்கு அத்திப்பழம் உதவி செய்கின்றது.

நார்ச்சத்து அதிகமாக இருக்கும் அத்திப்பழம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆனால், காய்ந்த அத்திப்பழங்களில் அதிக அளவு சர்க்கரை நிறைந்துள்ளதால் அவற்றை மிகச் சிறிதளவே உட்கொள்ள வேண்டும்.

இதய ஆரோக்கியத்தினை அதிகரிக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கின்றது. இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைப்பதுடன், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்குவதுடன், இதய சம்பந்தமான கோளாறுகள் வராமலும் தடுக்கின்றது.

அத்திப்பழத்தை உட்கொள்வதால் எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகின்றன. இதிலுள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்தினை அதிகப்படுத்துவதுடன் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் நோய் ஏற்படும் வாய்ப்பினையும் குறைக்கின்றது.

அத்திப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் வாயில் உள்ள கிருமிகள் நீக்கப்படும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். நெடுநாட்களாக இது மாதிரி தொந்தரவு உள்ளவர்களுக்கு அத்திப்பழம் ஒரு நல்ல தீர்வை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் 9 சுவையூட்டி மசாலாப் பொருட்கள்!
Figs provide super relief for anemia

பெண்களுக்கு பொதுவாக இரத்த சோகை பிரச்னை இருக்கும். அவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்து எனலாம். இதை பாலுடன் சேர்த்து சாப்பிட இரத்த சோகை பிரச்னையை தவிர்க்கலாம். இரவில் 3 முதல் 5 பழம் வரை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் இப்பழத்தையும் சாப்பிட்டுவர, உடலில் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்து, இரத்த சோகையை முற்றிலும் குணமாக்கிவிடும்.

உலகில் 90 சதவீதம் அத்திப்பழங்கள் உலர்ந்த பழங்களாகத்தான் விற்கப்படுகின்றன. காரணம், அது பறித்த ஒரு வாரம் வரைதான் ப்ரெஷ்ஷாக இருக்கும். அத்திப்பழத்தில் புளிப்பு வாசம் வந்தால் அது கெடப்போகிறது என்று அர்த்தம். அத்திப்பழத்தின் வாசனை மென்மையாக இருக்க வேண்டும். அதனை குளிர்ந்த இடத்தில் வைத்துதான் பாதுகாக்க வேண்டும். மூன்று அத்திப்பழத்தில் ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்து உள்ளது.

அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு இது சிறந்தது. அத்திப்பழத்தின் காய்களில் இருந்து வரும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்திமர பட்டை சூரணத்தை வெந்நீரில் கொதிக்க வைத்து காலையில் சாப்பிட்டு வர கருப்பை வீக்கம், கருப்பை கட்டிகள் மறையும். இதே சூரணம் வெள்ளைப்படுதலையும் சரி செய்யும். அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கருப்பை தொந்தரவுகளை சரிசெய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com