குளிர் காலத்தில் ஊட்டச்சத்து தரும் ஐந்து பச்சைக் காய்கறிகள்!

Five Green Vegetables That Are Nutritious For Winter
Five Green Vegetables That Are Nutritious For Winterhttps://lovemesk.live

ழை, குளிர், பனி ஆகிய காலங்களிலும் நம் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கக்கூடிய ஐந்து பச்சை நிறக் காய்கறிகள் யாவை? அவற்றில் அடங்கியுள்ள நற்பயன்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

குளிர் காலத்துக்கு ஏற்ற ஊட்டச் சத்துக்களை அளிப்பதில் சூப்பர் ஹீரோவாக உள்ளது காலே என்னும் பச்சை நிற இலைக் காய். இதில் வைட்டமின் A, C, K ஆகிய முக்கிய ஊட்டச் சத்துக்கள் ஏராளமாக உள்ளன. காலே சேர்த்து சூப், சாலட், ஸ்மூத்தி ஆகியவை தயாரிக்கும்போது அவற்றிலுள்ள ஊட்டச் சத்துக்கள் பல மடங்கு அதிகரிக்கிறது.

அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்களும் நார்ச்சத்தும் கொண்டுள்ள புரோகோலியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை கட்டமைக்க முடியும். இதை ஆவியில் வேகவைத்து சாப்பிட்டால் முழு அளவு சத்துக்களையும் பெற முடியும். ரோஸ்ட், டாஸ் (toss), ஸ்டிர் ஃபிரை (stir fry) செய்தும் உண்ணலாம்.

இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் அதிகளவு நிறைந்துள்ள பசலைக் கீரை உடலின் சக்தி அளவை நன்கு உயர்த்துகிறது. இக்கீரையை ஆம்லெட், ராப் (wrap) ஆகியவற்றில் சேர்த்தும், கூட்டாக செய்தும் உண்ணலாம்.

இதையும் படியுங்கள்:
உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்!
Five Green Vegetables That Are Nutritious For Winter

அதிகளவு வைட்டமின்களும் நார்ச்சத்தும் கொண்ட சிறிய சைஸ் காய் ப்ரஸ்ஸல்ஸ் ஸ்பிரௌட் (Brussels Sprout). சிறிது தேன் அல்லது பால்சமிக் வினிகர் சேர்த்துப் பொரித்து சாப்பிட கூடுதல் சுவை கிடைக்கும்.

அதிகளவு வைட்டமின்களும் நார்ச்சத்தும் சுவையும் கொண்டது பச்சை பீன்ஸ் காய். குறைந்த அளவு கலோரி உள்ளது. பொரியலாக சமைத்து சைட் டிஷ்ஷாக வைத்து உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com