கோடை காலம் தொடங்கிவிட்டது. உடல் வறட்சி, நாக்கு வறட்சிக்கு இதமாக நாக்கு ஜில்லுனு தண்ணி கேட்கும். நம்மாலும் குடிக்காமல் இருக்க முடியாது. ஜில்லென்று ஐஸ் வாட்டர் குடிப்பதால் நமக்கு அந்த நேரம் இதமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஆனால், அதன் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதுதான் கொடுமையிலும் கொடுமை. நிறைய பக்க விளைவுகள் இருந்தாலும் ஐந்து முக்கியமான பக்க விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். அது என்னவென்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. குளிர்ந்த நீரை குடிப்பதால் அசிடிட்டி பிரச்னைகள் ஏற்படுகின்றன. குளிர்ந்த நீர் வயிற்றுக்குள் செல்லும்போது குடல்கள் சுருங்கி அசிடிட்டி பிரச்னை ஆரம்பிக்கிறது.
2. குளிர்ந்த நீரை அதிகமாகக் குடித்தால், அது செரிமான அமைப்பை பாதிக்கும். உணவை ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படலாம். மேலும், மலச்சிக்கலுடன், வயிற்று வலி, குமட்டல், வாய்வு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
3. குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிப்பதால் மூளை உறைந்து போகும். குளிர்ந்த நீர் முதுகெலும்பின் பல உணர்திறன் நரம்புகளை குளிர்விக்கிறது. இங்கிருந்துதான் உடனடியாக மூளைக்கு செய்தி அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக தலைவலி தொடங்குகிறது. இதனால் சைனஸ் ஏற்படும் அபாயமும் உண்டாகிறது.
4. குளிர்ந்த நீரைக் குடிப்பதால் இதயத் துடிப்பு குறையும் அபாயம் உள்ளது. இது வேகஸ் நரம்பை பாதிக்கிறது. தண்ணீரின் வெப்பநிலை குறைவாக இருப்பதால், வேகஸ் நரம்பு பாதிக்கப்பட்டு, இதயத் துடிப்பு குறைகிறது. இதனால் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
5. அதிக அளவு குளிர்ந்த நீரை குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படாமல், கொழுப்பு கடினமாகிறது. இதன் காரணமாக எடை அதிகரிக்கலாம். எனவே, உடல் பருமன் பிரச்னையை தவிர்க்க வேண்டுமானால், குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மனதையும், நாக்கையும் கட்டுப்படுத்தி ஜில் தண்ணீர் குடிக்காமல் இந்த கோடையை ஆரோக்கியமான முறையில் கடந்து செல்வோம்.