கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள்!

Foods that increase fat in the liver.
Foods that increase fat in the liver.

ற்போதைய காலகட்டத்தில் சுகாதாரம் என்ற ஒன்றைப் பற்றி யாருமே அதிகம் சிந்திப்பதில்லை. இதனால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதில் கல்லீரல் கொழுப்பு பிரச்னையும் ஒன்றாகும். இந்த நோய் நாம் உட்கொள்ளும் மோசமான உணவு பழக்கத்தின் காரணமாகவே ஏற்படுகிறது. அதிகப்படியான மதுபானம், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மைதா மாவு ஆகியவை இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. கல்லீரல் கொழுப்பை ஏற்படுத்தும் சில உணவு வகைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்: பொதுவாகவே, வெள்ளை சர்க்கரையை அதிகம் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் இவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் என பார்க்கும்போது, ஜிலேபி மற்றும் குலோப் ஜாமுன் இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் இனிப்பு வகைகளாக உள்ளன. இதில் சர்க்கரை அதிகமாக சேர்த்து தயாரிக்கப்படுவதால் உடலின் சர்க்கரை அளவை அதிகரித்து கல்லீரல் கொழுப்பு நோய் உண்டாக வழிவகுக்கிறது.

பொறித்த உணவுகள்: இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் பக்கோடா மற்றும் சமோசா. இது இந்தியாவில் எல்லா இடங்களிலுமே தினசரி தெரு உணவாக மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. இவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் தயாரிக்கப்படும்போது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. இப்படி அதிகம் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளில் ட்ரான்ஸ்-ஃபேட் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் கல்லீரலில் கொழுப்பு படிகிறது.

மதுபானங்கள்: அதிகமாக மது அருந்துதல் நேரடியாக கல்லீரலைத்தான் பாதிக்கும். ஏனென்றால், கல்லீரலில்தான் ஆல்கஹால் பிராசஸ் செய்யப்படுகிறது. எனவே, அதிகமாக மது உட்கொண்டால் இது கல்லீரலை சேதப்படுத்தும்.

ப்ராசஸ்டு தானியங்கள்: வெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் கல்லீரலை பாதிக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, கல்லீரலுக்கு அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக செயற்கை வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை கல்லீரல் கொழுப்பு உருவாக வழிவகுக்கிறது. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாகக்கூட மாறலாம்.

நீங்கள் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் மேற்கூறிய உணவுகளை முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் அல்லது அவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால், முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். இது உங்களது உடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com