மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும் உணவுகள்!

மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும் உணவுகள்!
Published on

ம் உடலின் அனைத்து உறுப்புகளின் இயக்கத்தையும், உணர்வுகளை சேமிப்பதும் வெளிப்படுத்துவதுமாகிய செயல்களையும் ஒருசேர தனது பிடியில் வைத்து, கணினியின் ஹார்ட்வேர், சாப்ட்வேர் போல் இடைவிடாது வேலை செய்துகொண்டிருக்கும் நமது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது நம் தலையாய கடமைகளில் ஒன்றல்லவா? அதற்காக நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, க்ரான்பெரி, பிளாக்பெரி போன்ற பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டானது ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் வீக்கத்தையும் குறைத்து, மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஓட்ஸ், பார்லி, குயினோவா போன்ற முழு தானியங்களில் B வைட்டமினின் பல்வேறு வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இவை மூளையின் வீக்கத்தைக் குறைத்து நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

காலே, பசலை, ப்ரோக்கோலி, கொலார்ட் போன்ற கீரை வகை காய்கறிகளில் மூளையின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்-K, லூடின், ஃபொலேட், பீட்டா கரோடீன் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

பாதாம், வால்நட், முந்திரி, பேக்கன், ஃபிளாக்ஸ் ஸீட்ஸ், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த கொட்டைகள் / விதைகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

காபியிலுள்ள கஃபைன் (caffeine) என்ற பொருள் மூளையை சுறுசுறுப்பாக்குவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. கவன ஈர்ப்பு, எச்சரிக்கைத் தன்மைகளை அதிகரிக்கிறது.

ஆரஞ்சு பழத்திலுள்ள அதிகளவு வைட்டமின்-C மூளையின் அறிவாற்றல் திறனை அதிகரிக்கிறது.

அவக்கோடா என்ற வெண்ணெய் பழத்திலுள்ள நிறைவுறாத கொழுப்பானது மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கவல்லது.

டார்க் சாக்லேட்டிலுள்ள அதிகளவு ஃபிளேவனோல்கள் அடங்கிய கோகோவானது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குகிறது.

மேற்குறிப்பிட்ட ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து நமது மூளையின் செயல்திறனைக் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com