நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Foods that night shift workers should eat!
Foods that night shift workers should eat!
Published on

இன்றைய காலத்தில் பலர் தங்களது வாழ்வாதாரத்திற்காக நைட்ஷிப் வேலை செய்கிறார்கள். அதுவும் பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் இரவு நேர வேலைதான்.‌ இது சாதாரணமான வேலை நேரத்திற்கு மாற்றாக இருந்தாலும், உங்கள் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இரவு நேர வேலை செய்பவர்கள் சரியான உணவு முறையை பின்பற்றுவது என்பது அவர்களது ஆற்றலை பராமரித்து, செரிமான பிரச்சனைகள் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற எதிர்மறையான விளைவுகளை தடுப்பதற்கு அவசியம். இப்பதிவில் நைட்ஷிப் வேலை செய்பவர்கள் எதுபோன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். 

  • நைட் சிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு புரதச்சத்தின் தேவை அதிகம் இருக்கும். எனவே சிக்கன், மீன், முட்டை போன்ற புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும். 

  • பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு மலச்சிக்கலைத் தடுக்க உதவும். 

  • இரவு நேர வேலை பார்ப்பவர்கள் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஆலிவ் எண்ணெய், அவகாடோ, நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை கட்டாயம் சாப்பிட வேண்டும். இது அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

  • தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் நீரேற்றத்துடன் இருந்தாலே அதிகப்படியாக இருக்கும் சோர்வை தவிர்க்க முடியும். 

இதையும் படியுங்கள்:
PCOS/PCOD உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
Foods that night shift workers should eat!

எந்த நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும்? 

முடிந்தவரை காலை நேரத்தில் சரிவிகித உணவாக முட்டை, தயிர், பழங்கள் மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள். மதிய உணவாக சாலட், சிக்கன் பிரஸ்ட் அல்லது மீன் போன்ற புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். 

இரவு உணவு எப்போதும் எளிதில் செரிமானமாகக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு சப்பாத்தி, சூப், காய்கறி குழம்பு போன்றவற்றை சாப்பிடலாம். ஒருவேளை நடுஇரவில் வேலை செய்யும்போது பசித்தால் பழங்கள், நட்ஸ், தயிர் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். 

இத்தகைய உணவுகளை சாப்பிடுவது உங்களை என்றும் ஆரோக்கியத்துடன் சோர்வில்லாமல் வைத்துக் கொள்ளும். நைட் ஷிப் வேலை பார்ப்பவர்கள் அவர்களது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் காலப்போக்கில் பல்வேறு விதமான உடல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com