கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!

கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!
Published on

டற்செயற்பாட்டின் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமப்படுத்துவது, ஊட்டச் சத்துக்களை சீராகப் பயன்படுத்துவது என பலவிதமான வேலைகளை கல்லீரல் செய்கிறது. ஆண்களைப் போலவே பெண்களும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களுக்குக் கல்லீரலில் உண்டாகும் நோய்களில் முக்கியமானது சிரோசிஸ் எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகும். அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படும் வீக்கமே சிரோசிஸ் எனப்படுகிறது. இந்நோய் ஊட்டச்சத்து குறைபாட்டால், மது அருந்துவதால், அதிக உடல் எடை போன்றவற்றால் ஏற்படுகிறது. வைட்டமின் பி, சி தாதுக்கள் மற்றும் குளுட்டோ தயானின் நிறைந்த உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. இனி, கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில உணவு வகைகளைக் காண்போம்.

காபி: இதில் காபின், கரிம அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.

பச்சை இலை, காய்கறிகள்: கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை உணவுகளில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள குளோரோபில் நச்சு ரசாயனங்களை நீக்க உதவுகிறது.

பருப்புகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளில் உள்ள மோனோசேச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சேச்சுரேட்டட் கொழுப்புகள் கல்லீரலில் உண்டாகும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

பூண்டு: பூண்டில் உள்ள அல்லிசின், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் கல்லீரலில் நச்சுகளை சேர விடாமல் தடுக்கிறது.

பீட்ரூட்: இதில் நிறைய நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, நச்சுக் கழிவுகள் உடலிலிருந்து வெளியேறவும் துணைபுரிகின்றன. மேலும், முட்டை, சிட்ரஸ் பழங்கள், இஞ்சி, மஞ்சள், தேநீர் மற்றும் மீன் போன்றவையும் கல்லீரலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து பாதுகாக்கும் உணவுகள் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com