மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

Arthritis
Foods to avoid for Arthritis Patients
Published on

மூட்டு வலி என்பது பலருக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பாதிப்பாகும். இது மூட்டு தேய்மானம், கீழ்வாதம் மற்றும் காயம் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். மூட்டு வலியை நிர்வகிக்க பல வழிகள் உள்ளன. அதில் மருந்துகள், பிசியோதெரபி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை அடங்கும். நாம் சாப்பிடும் உணவு மூட்டு வலியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சில உணவுகள் வீக்கத்தை அதிகரிக்கவும் மூட்டு வலியை மோசமாகக்வும் செய்யலாம். அதேசமயம் மற்ற உணவுகள் வலியை குறைத்து மூட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்தப் பதிவில் மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: ஃபாஸ்ட் ஃபுட், நீண்ட காலம் அடைத்து வைக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகளில் பொதுவாக ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சோடியம் மற்றும் செயற்கை ரசாயனங்கள் அதிகம் இருக்கும். இந்த உணவுகள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி எடை அதிகரிப்புக்கு பங்களிப்பதால் மூட்டுகளில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு மூட்டுவலி பிரச்சனை அதிகமாகும். எனவே மூட்டு வலி நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

கெட்ட கொழுப்பு உணவுகள்: சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளில் காணப்படும் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் வீக்கத்தை ஏற்படுத்தி இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். மூட்டு வலி நோயாளிகள் இந்த கொழுப்புகளை அதிகமாக உட்கொள்வதால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கமானது ஏற்படும். இவற்றிற்கு பதிலாக நட்ஸ் மற்றும் விதைகளில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.  

அதிக சர்க்கரை உணவுகள்: அதிக சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இது மூட்டு வலியின் அறிகுறிகளை மோசமாக்கும். குறிப்பாக குளிர்பானங்களில் காணப்படும் செயற்கை இனிப்புகள் சில நபர்களுக்கு மூட்டு வலியின் தீவிரத்தைத் தூண்டலாம். மூட்டு வலி நோயாளிகள் சர்க்கரை பானங்கள் இனிப்புகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் உட்கொள்வதைத் குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள் போன்ற இயற்கையான இனிப்பு உணவுகளை சாப்பிடலாம். 

இதையும் படியுங்கள்:
மைதா உணவுகளை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? மீறி சாப்பிட்டா? 
Arthritis

மைதா உணவுகள்: பொதுவாகவே மைதா உணவுகளில் நார்ச்சத்து குறைவு மற்றும் கிளைசெமி குறியீடு அதிக. இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தி மூட்டு வலி வீக்கத்தை அதிகரிக்கக் கூடும். 

எனவே மூட்டு வலி நோயாளிகள் தங்களின் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மேலே குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பது மூலமாக, மூட்டு வலியின் தீவிரத்தன்மையைக் குறைத்து விரைவில் குணமடையலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com