இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கலாமே!

இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கலாமே!
Niroshi

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. அந்த உணவை உண்ணுவதிலும் சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி சிறியக் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாத ஏழு வகை உணவுகளையும், அதற்கான காரணத்தையும் இந்தப் பதிவில் காண்போம்.

1. ஃபுரூட் ஜூஸ் உள்ளிட்ட சர்க்கரை சேர்த்த இனிப்பு வகைகள்: இதனால் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும். இதுபோன்ற உணவுகள் பல் சொத்தையை உண்டாக்கும் என்பதால் இவற்றை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நலம்.

2. தேன்: தேனில் இருக்கும் சில பாக்டீரியாக்கள் விஷத் தன்மை கொண்டவை என்பதால் இவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பது நல்லது.

3. சிப்ஸ் போன்ற அதிக உப்பு சேர்க்கப்பட்ட ஸ்நாக்ஸ்: அதிகளவு உப்பு, காரம் சேர்க்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் போன்ற பொருட்கள் குழந்தைகளின் கிட்னியை எளிதில் பாதிக்கும் என்பதால் அவற்றை கொடுப்பது குழந்தைகளுக்கு தீங்கை விளைவிக்கும்.

4. நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள்: இதிலுள்ள மைதா மற்றும் ருசிக்காக இவற்றில் சேர்க்கப்படும் வேறு சில ரசாயனப் பொருட்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.

5. ஷெல் ஃபிஷ், ஒயீஸ்டர் (Oyester): இதுபோன்ற உணவுப் பொருட்களில் பெரும்பாலும் விஷத்தன்மை இருக்க வாய்ப்புண்டு. Shark, sword fish ஆகியவற்றிலுள்ள அதிகப்படியான மெர்குரி குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடியதாக உள்ளது.

6. டின்களில் அடைத்து பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்: இதுபோன்ற உணவுகளை பதப்படுத்த முன்னெடுக்கும் செயல்முறைகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகள் மற்றும் வேறு சில பொருள்கள் உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவையாகும். பால் பொருட்களிலுள்ள பாக்டீரியா குழந்தைகளுக்க பேதி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

7. கிரேப்ஸ், பாதம், வேர்க்கடலை போன்றவை: சிறு குழந்தைகளுக்கு இது மாதிரியான பழம் மற்றும் பருப்புப் பொருட்களை உண்ணக் கொடுக்கும்போது அவை தொண்டையில் சிக்கி சிலநேரம் மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகவே, சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய உணவுகளை மட்டும் கொடுத்து அவர்களை நல்ல முறையில் வளரச் செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com