வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

Better metabolism
Better metabolism
Published on

நாம் உண்ணும் உணவானது வயிற்றுக்குள் சென்றபின் செரிமானம் உள்ளிட்ட பல இரசாயன மாற்றங்களுக்கு உட்படுகிறது. அப்போது உணவிலுள்ள சத்துக்கள் பிரிக்கப்பட்டு சக்தியாக உடலுக்குள் சேர்கின்றன. கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இந்த செயல்பாடுகளையே வளர்சிதை மாற்றம் (Metabolism) என்கிறோம். இதுவே  உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உடல் பராமரிப்பிற்கு உதவி புரிவது. மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறும்போது மற்ற இயக்கங்கள் சரிவர இயங்கும். அதற்கு நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்தி ஊட்டச்சத்து மிக்க உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது அவசியம். அந்த வகையில் வளர்ந்து வரும் பருவத்தில் இருக்கும் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய 8 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. அவகாடோ: இந்தப் பழத்தில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் மிக அதிகம் உள்ளன. இவை மெட்டபாலிச இயக்கத்தை நிர்வகிக்கக் கூடிய ஹார்மோன்களின் உற்பத்தி அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்க உதவும். மேலும் இப்பழத்தில் சீரான செரிமானத்துக்கு உதவக்கூடிய நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளன.

2. பிரவுன் ரைஸ்: பிரவுன் ரைஸில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் அதிகம் நிறைந்துள்ளன. உடலானது இதை மிக நிதானமாக ஜீரணிக்கச் செய்து, மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும், உடலுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்கவும் வழி கோலும்.

3. பயறு வகைகள்: பயறு வகைகளில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளன. இவை சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதுடன், மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெற்று அதிகளவு சக்தி கிடைக்கவும் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும்.

4. புரோக்கோலி: புரோக்கோலியிலுள்ள அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும், நச்சுக்கள் வெளியேறவும் உதவும்.

5. ஸ்வீட் பொட்டட்டோ: இதில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்களும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உடலுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்கவும் உதவி புரிகின்றன.

6. பெரி வகைப் பழங்கள்: ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி போன்ற பெரி வகைப் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் மிக அதிகம் உள்ளன. இவை சிறப்பான செரிமானத்துக்கும் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும் உதவுகின்றன. மேலும், மற்ற பழங்களை ஒப்பிடும்போது, இப்பழங்களில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!
Better metabolism

7. கிரீக் யோகர்ட்: இதிலுள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் புரோபயோட்டிக்குகள் சிறப்பான செரிமானத்துக்கும் சிதைவுற்ற தசைகளை சீர்படுத்தவும் உதவுகின்றன. இவ்விரண்டு செயல்களும் ஆரோக்கியம் நிறைந்த மெட்டபாலிசம் நடைபெற துணை நிற்பவை. இனிப்பு சுவை சேர்க்கப்படாத கிரீக் யோகர்ட்டை தேர்ந்தெடுத்து உண்பது அதிக நன்மை தரும்.

8. ஓட்ஸ்: முழுமையான ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்கவும் சக்தியை தொடர்ந்து நிதானமாக  வெளியிடச் செய்யும். இதனால் மெட்டபாலிசம் எந்த இடையூறுமின்றி சிறந்த முறையில் நடைபெறும்.

மேற்கூறிய உணவு வகைகளை அடிக்கடி உங்க வீட்டுக் குழந்தைகளுக்கு உண்பதற்கு கொடுத்து அவர்களின் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும், ஆரோக்கியம் மேம்படவும் உதவலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com