குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குளூட்டன் என்பது கோதுமை, சோளம், பார்லி, கம்பில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். சிலருக்கு, ’பசையம்’ எனப்படும் குளூட்டன் உள்ள உணவுகளை உண்பதன் மூலம் ஒவ்வாமை ஏற்படும். இவற்றை உண்பதால் உடல் எடை அதிகரிப்பு, இரத்த சோகை, வயிற்று வீக்கம், வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை, சோர்வு போன்ற செரிமான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடலாம்.

சில சமயங்களில் கைகளில் உண்டாகும் வீக்கமானது, வாரம் மற்றும் மாதக் கணக்கிலோ அல்லது சில ஆண்டுகள் வரைகூட நீடிக்கிறது. மேலும் இது, செலியாக் நோய்க்கும் வித்திடுகிறது. சரும பிரச்னைகள், வெளிறிய வாய் புண்கள், கை கால்களில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை, பற்களில் நிறமாற்றம், ஒழுங்கற்ற மாதவிடாய், கருச்சிதைவு, குமட்டல், வாந்தி, ஒற்றைத் தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய குளூட்டன் உள்ள உணவுகள்: கோதுமை, சோளம், பார்லி, கம்பு, மைதா, ஓட்ஸ், பிரட், பிஸ்கட், ரஸ்க், ரவை, சேமியா, சாலட், டிரஸ்ஸிங்ஸ், கெட்ச்அப், ஐஸ்கிரீம், சுவையூட்டிகள், மிட்டாய் பார்கள் மற்றும் சோயா சாஸ், காய்கறி பர்கர்கள், மாட்டிறைச்சி, பெரும்பாலான தானியங்கள், பாஸ்தா மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும்.

கோதுமை மாவுக்குப் பதிலாக மக்காச்சோள மாவு, பலா மாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, அரிசி மாவு போன்றவற்றில் தோசை மற்றும் சப்பாத்தி செய்யலாம்.

குளூட்டன் இல்லாத உணவுகள்: இறைச்சி, மீன், முட்டை, கோழி பால், தயிர், பனீர், வெண்ணெய், நெய், கோவா, அனைத்து வகையான பச்சை காய்கறிகள், பழங்கள், அரிசி உணவுகள், மக்காச்சோளம், பழுப்பரிசி, அனைத்து வகையான நட்ஸ்கள் மற்றும் விதைகள், அனைத்து வகையான தாவர எண்ணெய் மற்றும் வெண்ணெய், அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களில் குளூட்டன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com