உற்சாக ஹார்மோன்கள் ஊற்றெடுக்க உண்ண வேண்டிய உணவுகள்!

Foods to eat to boost excitement hormones
Foods to eat to boost excitement hormoneshttps://www.amazingviralnews.com

பொதுவாக, பெண்களின் மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வேலைப் பளு, மாதவிடாய் போன்ற நேரங்களில் ஏற்படும் அசௌகரியம் போன்ற காரணங்களால் அவர்கள் கோபத்தையோ, எரிச்சலையோ வெளிப்படுத்தக் கூடும். அந்த மாதிரி நேரங்களில் சில குறிப்பிட்ட வகை உணவுகளை அவர்கள் உட்கொள்ளும்போது அவர்களுக்குள்ளிருக்கும் உற்சாக ஹார்மோன்கள் ஊற்றெடுத்துப் பீறிட ஆரம்பிக்கும். அப்புறமென்ன, 'சந்தோஷம் பொங்குதே'ன்னு பாட வேண்டியதுதான். அதற்கு அவர்கள் உண்ண வேண்டிய சைவ உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

என்டார்ஃபின் (Endorphin) என்பது இயற்கையாக உடலுக்குள் உற்பத்தியாகக்கூடிய போதைப் பொருள் போன்ற ஒன்று. இது வலியைக் குறைக்கும். மனசுக்குள் உற்சாகம் தரும். டார்க் சாக்லேட்களில் உள்ள ஒரு கூட்டுப் பொருளானது என்டார்ஃபின்களை உற்பத்தி செய்ய உதவி, மனதிற்கு சந்தோஷம் அளிக்கும்.

ப்ளூ பெரி பழத்திலுள்ள அன்த்தோஸியானின் (Anthocyanin) என்னும் பொருள் வலிகளை எதிர்த்துப் போராடவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் கூடியது. மன அழுத்தம் தரக்கூடிய வீக்கங்களைக் குறைக்கும் குணம் கொண்டது லைக்கோபீன் (Lycopene) என்ற தாவர ஊட்டச்சத்து. இது செரி டொமட்டோவின் தோல் பகுதியில் அதிகமுள்ளது.

மனநிலையை சமநிலையில் வைக்க மறைமுகமாக உதவக்கூடியது வைட்டமின் B6 அடங்கிய வாழைப்பழம். அதேபோல், மனநிலையை சமநிலையில் வைக்கக்கூடிய செரோடோனின் என்ற பொருளை உற்பத்தி செய்ய உதவும் வைட்டமின் B6 அவோகடோவில் அதிகம் உள்ளது.

இரும்புச் சத்து குறைபாட்டல் உண்டாகும் அனீமியா நோயை தடுக்கக்கூடியது ஓட்ஸ். இதிலுள்ள அதிகளவு இரும்புச் சத்து மனநிலை எதிர்மறையாக மாறக்கூடிய அறிகுறியை நீக்கி ஆரோக்கியம் தரும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய வெள்ளிப் பொருட்கள் எங்கு உள்ளன தெரியுமா?
Foods to eat to boost excitement hormones

ஸ்ட்ரெஸ்ஸை நீக்கி, அமைதியான மன நிலையை ஊக்குவிக்கக்கூடியது மக்னீசியம் என்ற கனிமச்சத்து. இது வேர்க்கடலை, முந்திரி, வால்நட் போன்ற பலவிதமான தாவர விதைகள், கொட்டைகள் மற்றும் பசலை போன்ற பச்சை இலைக் கீரைகளிலும் அதிகம் நிறைந்துள்ளது.

இவ்வகை உணவுகளை பெண்கள் அதிகம் உட்கொண்டு ஸ்ட்ரெஸ்ஸில்லாமல் வாழ்வது நல்ல ஆரோக்கியம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com