40 வயதைத் தாண்டியவர்களின் கவனத்திற்கு... புற்றுநோய் எச்சரிக்கை! 

Cancer
Cancer warning!

மனித வாழ்வில் 40 வயது என்பது முக்கியமான மைல்கல். இந்த வயதில் உடல் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். ஹார்மோன் சமநிலையின்மை, செல் புதுப்பிப்பு குறைந்து போதல் போன்றவற்றால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கக்கூடும். எனவே 40 வயதைத் தாண்டியவர்கள் புற்று நோய்க்கான அறிகுறிகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். 

40 வயது தாண்டியவர்களுக்கு ஏன் புற்றுநோய் அபாயம் அதிகம்? 

வயது அதிகரிக்கும் போது செல்களில் உள்ள டி.என்.ஏ சேதமடையும் வாய்ப்புகள் அதிகம். டிஎன்ஏ சேதம் தான் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும். 

ஹார்மோன் சமநிலையின்மை சில வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுவதால் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். 

வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதனால் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட முடியாமல் போவதால். புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. 

புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி இல்லாதது போன்ற வாழ்க்கைமுறை பழக்கங்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே 40 வயதைக் கடந்தவர்கள் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல், முறையான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியைக் கொண்டிருப்பது அவசியம். 

40 வயதைத் தாண்டியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகள்: 

  • திடீரெனும் எடை இழப்பு

  • சோர்வு

  • விளக்க முடியாத வலி

  • தோலில் மாற்றங்கள்

  • விழுங்கும் போது சிரமம்

  • குரலில் மாற்றம்

  • மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

  • சிறுநீர் கழிக்கும் போது இரத்தம்

  • யோனி இரத்தப்போக்கு

  • அசாதாரண கட்டி அல்லது வீக்கம்

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 

40 வயதை தாண்டி அவர்கள் தங்கள் மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். இதில் மார்பக பரிசோதனை, Pap Smear, மலச்சிக்கல் பரிசோதனை போன்றவையும் அடங்கும். 

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்து, சரிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். இத்துடன் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். 

இதையும் படியுங்கள்:
தயிர் Vs மோர்: எது உடல் எடை குறைப்புக்கு நல்லது?
Cancer

அதிக எடை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். 

சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் சரும செல்களை சேதப்படுத்தி, புற்று நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அதிகப்படியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். 

இவற்றை முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே, புற்றுநோய் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். குறிப்பாக இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப நபர்களுக்கும் கட்டாயம் பகிர்ந்து அவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் செய்யுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com