செருப்பு கடி முதல் நீரிழிவு வரை... மூங்கில் செய்யும் மாயம்!

Bamboo
Bamboo

மூங்கிலை பற்றி அனைவரும் அறிந்தது என்னவென்றால் அதன் மரங்கள் வீடு கட்ட பயன்படும். மூங்கில் அரிசியில் பாயாசம் செய்து சாப்பிடலாம் என்பதுதான். அதன் இலையில் இருந்தே மருத்துவ குணங்கள் நிரம்பியது என்பது அனைவருக்கும் தெரியாது. அதனைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

மூங்கிலின் இலை, கணு ,வேர் விதை, உப்பு ஆகியவை மருத்துவ பயனுடையவை. தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.

பற்கள் பளிச்சிட: மூங்கில் இலையை அரைத்து முள் தைத்த இடத்தில் வைத்து கட்ட முள் வெளியாகும். இலையை சிறிது நீர் விட்டு இடித்துப் பிழிந்த சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை கொடுத்து வர இருமல் தீரும். மூங்கில் இலையை உலர்த்தி கொளுத்தி சாம்பலாக்கி புண்களின் மீது தூவ அவை விரைந்து ஆறும். இலைச் சாம்பலால் பல் தேய்க்க பற்கறைகள் அகன்று பற்கள் பளிச்சிடும்.

உதிர சிக்கல் தீர: இளம் மூங்கில் குறுத்து 100 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரிலிட்டு ஒரு லிட்டர் ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி, காலை, மதியம், மாலை 50 மில்லி அளவு குடித்து வரப் பேறுகால கருப்பை அழுக்குகள் வெளியேறும். சூதகக் கட்டு, வெள்ளை, காய்ச்சல், குடற்புழுக்கள் ஆகியவை தீரும்.

மூங்கில் மர மேல் தோல், கருஞ்சீரகம் ,மஞ்சள் மூன்றும் சம அளவு எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் கலந்து ஓரிரு வேலை கொடுக்க மகப்பேற்றின் போது ஏற்படும் உதிரச் சிக்கல் தீரும்.

செருப்புக்கடி புண் போக: மூங்கில் வேரை அரைத்துப் பற்றுப் போட சொறி ,சிரங்கு, படை முதலியவை தீரும். கோணி ஊசி போல் உள்ள பச்சை மூங்கிலை வெட்டி நறுக்கி நீர் விட்டு அரைத்து சாந்தை காலை மாலை செருப்புக் கடி புண்மீது இரண்டு நாள் பூச சரியாகும்.

இதையும் படியுங்கள்:
Summer Diabetes Tips: கோடை காலமும், நீரிழிவு நோயும்! 
Bamboo

நீரிழிவு தீர: மூங்கில் அரிசி உணவு மதுமேக நோயாளர்களுக்குத் தக்கதாகி நோயைத் தணிக்கும். மூங்கில் அரிசி பாயசம் மிகவும் விஷேச குணமுடையது. மூங்கில் அரிசி மாவு கஞ்சி சோர்வைப் போக்கி ஜன நல்ல உற்சாகத்தை தரும்.

கன்று போட்ட பசு மாட்டின் நஞ்சுக்கொடி விழுவதற்கு நீண்ட நேரமானால் மூங்கில் இலைகளை பறித்து போட்டால் பசு அதை சாப்பிட்டு நஞ்சுக் கொடியை வெளித்தள்ளும்.

மூங்கிலின் மருத்துவக் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டு, நல்ல வைத்தியரின் ஆலோசனை உடன் தக்க சமயத்தில் பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com