பிளேட்லெட்டுகளை அதிகரிக்கும் 7 அற்புதப் பழங்கள்!

Fruits for Increasing Platelets
Fruits for Increasing Platelets

பிளேட்லெட்டுகள் நமது ரத்தத்தின் முக்கியக் கூறுகளாகும். இவைதான் ரத்த உறைதலுக்கு உதவுகின்றன. ரத்தத்தில் போதுமான அளவு பிளேட்லெட்டுகள் இருப்பது நமது ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் முக்கியமானது. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க பல மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், உங்களது உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்வது மூலமாகவே இயற்கையாக பிளேட்லெட் அளவை அதிகரிக்க முடியும். அத்தகைய பழங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.‌ 

  • பப்பாளியில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் இருக்கும் Papain என்ற நொதி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

  • மாதுளையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. அவை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. மாதுளைக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், இது உங்கள் ரத்தநாளங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும். 

  • கிவி பழத்தில் விட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது எலும்பு மஞ்சையை அதிக பிளேட்லெட்டுகளை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது, இதனால் இயற்கையாகவே உங்களது உடலில் பிளேட்லெட்டுகள் அதிகரிக்கும். 

  • ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெரி போன்ற பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளது. இந்தப் பழங்களை தவறாமல் உட்கொள்வதால், பிளேட்லெட் அளவை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும். 

  • ஆரஞ்சு பழமானது சுவையானது மட்டுமல்ல விட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் பிளேட்லெட் உற்பத்தியை மேம்படுத்துவது ஆரோக்கிய நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் பங்களிக்கின்றன. 

  • தர்பூசணி பழமானது நமக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமின்றி பிளேட்லேட்டுகளை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் லைகோபின் என்ற சேர்மம் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியை ஊக்குவித்து ஒட்டுமொத்த ரத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

  • கருப்பு திராட்சையில் பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்க கூடிய பாலிப்பினால்கள் எனப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இவை ரத்த நாளங்களை பாதுகாத்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. 

இதையும் படியுங்கள்:
ஆண்களின் எலும்புகள் வலிமையாக சில டிப்ஸ்!
Fruits for Increasing Platelets

பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த பழங்கள் உதவியாக இருக்கும். மேலும், உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணர்வுடன் கலந்து ஆலோசிப்பது முக்கியம். இந்தப் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்து, இயற்கையாகவே ரத்த பிளேட்லெட் அளவை அதிகரிக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com