பற்களின் நிறம் மாறாமல் பாதுகாக்கும் பழங்கள்!

பற்களின் நிறம் காக்கும் பழங்கள்
பற்களின் நிறம் காக்கும் பழங்கள்
Published on

மது பற்களின் ஆரோக்கியம் காத்து அதனை பளிச்சென்று வைத்துக்கொள்ள சில பழங்கள் நமக்கு உதவுகின்றன. அதுபோன்ற சில பழ வகைகளை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வாழைப்பழம்: இதிலுள்ள மக்னீசியம், கால்சியம், மங்கனீசு போன்ற சத்துக்கள் பற்களிலுள்ள அழுக்குகளை போக்குகிறது. செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது என்கிறார்கள். பேக்கிங் சோடா,  வாழைப்பழம், விர்ஜின் தேங்காய் எண்ணெய் இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட் போல் செய்து தினமும் பல் துலக்கிவந்தாலே, பல் சொத்தைகள் வராமல் தடுக்கலாம்.பற்களும் பளிச்சென்று இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி: இதிலுள்ள சத்துக்கள் பற்களை வலுவாக்கி பற்களின் கறைகளை போக்கும். ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை பல் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. கூடுதலாக, பாக்டீரியா தொற்று, திசுக்களை செல்லுலார் சேதம் செய்வது போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

ஆப்பிள்: இதிலுள்ள மாலிக் அமிலம் அதிக உமிழ்நீர் சுரக்கச் செய்து பற்களை சுத்தமாக்குகிறது.ஆப்பிள் இனிப்பாக இருக்கலாம், ஆனால் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம். ஒரு ஆப்பிளை சாப்பிடும் போது உங்கள் வாயில் உமிழ்நீரை உற்பத்தி செய்கிறது, இது தேவையற்ற பாக்டீரியா மற்றும் உணவுத் துகள்களை கழுவுகிறது.

ஆரஞ்சு: இதிலுள்ள வைட்டமின் சி பற்களின் அழுக்குகளை நீக்கும். அதோடு பற்களின் ஈறுகளுக்கும், பற்களுக்கும் பலத்தை தரும் இரும்புச் சத்தையும் வழங்குகிறது ஆரஞ்சு.

கிரன் பெர்ரி: பற்களை சொத்தையாவதிலிருந்து பாதுகாத்து, பற்களின் துர் நாற்றத்தையும் தவிர்க்கும். பல் சிதைவு மற்றும்  பல் துவாரங்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

தர்பூசணி: மாலிக் அமிலம் அதிகமுள்ள பழம். இது பற்களின் கறை போக்க உதவும்.  தர்பூசணியில் அதிகம் நிறைந்துள்ள வைட்டமின் சி நமது ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஈறுகளில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. தர்பூசணி உட்கொள்வதால் பற்கள் பளிச்சென்று இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உதடுகள் வறண்டு போவதையும் தடுக்க உதவுகிறது.

அன்னாசி பழம்: இதிலுள்ள ப்ரோமெலைன் பற்களின் நிறம் மாறி விடாமல் பாதுகாக்கிறது. வீக்கம் மற்றும் சிராய்ப்பு ஆகியவற்றைக் குறைக்க ப்ரோமெலைன் உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன . பல் அறுவை சிகிச்சைக்கு முன் எடுத்துக் கொண்டால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் , இது வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் போலவே நிவாரணம் அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆறடியில் வலை பின்னும் அதிசய சிலந்திகள்!
பற்களின் நிறம் காக்கும் பழங்கள்

பப்பாளி: இதுவும் அன்னாசி போன்றே பற்களின் நிறம் மாறாமல் காக்க உதவுகிறது, இது ப்ரோமெலைன் என்ற நொதியைக் கொண்டுள்ளது, இது பற்களில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது.

திராட்சைகள்: இது பைட்டோ கெமிக்கல்களின் மூலமாகும். இது குழியை உண்டாக்கும் பிளேக் பாக்டீரியாவை கொல்லும் என்று கருதப்படுகிறது. திராட்சையில் உள்ள சில கலவைகள் ஈறு நோயுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

தக்காளி: தக்காளி சாறுடன் பற்பசை சிறிதளவு சேர்த்துக் கொண்டு, நன்றாக நுரை வரும் வரை மிக்ஸ் செய்யுங்கள். பிறகு பிரஷ் செய்யுங்கள். ஒரு வாரம் இப்படி செய்ய பற்களின் மஞ்சள் கறை சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com