மழை கால அவசிய உணவு நெய்: ஏன் தெரியுமா?

ghee
ghee
Published on

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடல் மற்றும் மன நலனுக்கு உகந்தது. அதோடு, மழைக்காலத்தில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு நெய். மூன்று வேளை உணவுடனும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சர்க்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம், அசிடிட்டி, எலும்பு பலவீனம், பிசிஒடி மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும்  நல்லது. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் களைப்பு, சிடுசிடுப்பு, அலுப்பு இருப்பவர்கள், களைப்பாக இருப்பவர்கள், மதிய உணவுக்கு முன் வெல்லமும், நெய்யும் எடுத்துக்கொள்ளவது நல்ல பலனைத் தரும்.

நெய்யில் உள்ள, ‘லூரிக் அமிலம்’ ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பங்கஸ் பண்புகள் கொண்டது. உடலில் உள்ள கெட்ட  சத்துக்களை வெளியேற்றவும், மழைக் காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளவும் நெய் உதவுகிறது.

நெய்யில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கும், வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும், வைட்டமின் ஈ செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும் மற்றும் வைட்டமின் கே 2 ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியம் ஊட்டச்சத்தை உடல் முழுவதும் கொண்டு சேர்க்கவும் உதகிறது.

பொதுவாக, மழைக் காலத்தில் செரிமான சக்தி குறையும். நெய் மழைக் காலத்தில் செரிமானத்தை அதிகரிக்கிறது. ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் போதும். நெய் குடல்களின் இயக்கத்தை விரைவுபடுத்தி, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிப்பதோடு, செரிமான அமைப்பை விரைவுபடுத்தி வயிற்றை எளிதில் சுத்தப்படுத்த உதவும். இரவில் ஒரு ஸ்பூன் நெய்யை சூடான பாலில் கலந்து குடித்து வர, மலச்சிக்கலை சரியாகும்.

நமது உடலில் மழைக் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காரணம், அதிலுள்ள காரோட்டினாய்டு, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஃபங்கல், ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள். இவை சளி, காய்ச்சல் மற்றும் இருமலை எதிர்த்துப் போராட உதவும். தினமும் இரண்டு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் போதும்.

மழைக் காலத்தில் நம் தலைமுடியில் வறட்சி ஏற்படும். இதனைத் தவிர்க்க  நெய்யில் உள்ள ஒமேகா -3 , ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உதவும். இது மயிர்க்கால்களுக்கு ஈரத்தன்மையை வழங்குகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே2 போன்றவை ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. மழைக் காலத்தில் நெய்யை தலைமுடிக்கு தேய்த்து வந்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நெய்யை இரவில் தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்ய முடி கொட்டுவது நிற்கும்.

நெய் சருமப் பாதுகாப்பை மழைக் காலத்தில் வழங்குகிறது. மழைக் காலத்தில் கட்டிகள், பருக்கள் தோன்றும். அதனை தவிர்க்க நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உதவும். அவை சரும வறட்சியை தடுத்து, ஈரப்பதத்தை தரும். எப்படிப்பட்ட சரும வகையாக இருந்தாலும் சரி, நெய் சருமத் துளைகளை  சுத்தம் செய்து, சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவுகிறது. மழைக்கால முக வறட்சியை போக்க 3 ஸ்பூன் நெய்யில் மஞ்சள் நீர் சேர்த்து முகத்தில் மாஸ்க்  போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ பொலிவிழந்த முகச் சருமம் சரியாகும்.

இதையும் படியுங்கள்:
வாரம் ஒரு முறை பச்சைப்பயிறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
ghee

பொதுவாக, மழைக் காலங்களில் நாம் அதிக சுறுசுறுப்பாக இருக்க மாட்டோம். ஒருவித சோர்வு நம்மை சூழ்ந்திருக்கும். இந்த சமயத்தில் நெய் சாப்பிடுவது நல்லது. காரணம், நெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் நமக்கு அதிக ஆற்றல் கிடைப்பதோடு, சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும் நெய் உதவுகிறது.

நெய்யில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை அதிகப்படுத்த நெய் உதவுகிறது. நெய்யில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது மனநிலையை மேம்படுத்துவதன் மூலமாக மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com