இஞ்சி டீ Vs புதினா டீ: எது வயிற்று வலிக்கு சிதறந்தது? 

Ginger Tea Vs Mint Tea
Ginger Tea Vs Mint Tea!
Published on

இயற்கை மருத்துவத்தில் வயிற்று வலியை குறைக்க பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இஞ்சி, புதினா மிகவும் பிரபலமானவை. இஞ்சி டீ மற்றும் புதினா டீ இரண்டையும் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணையாக பலர் நம்புகின்றனர். ஆனால், இவற்றில் எது உண்மையில் வயிற்று வலிக்கு சிறந்தது என்பதை இந்தப் பதிவின் வாயிலாகத் தெரிந்து கொள்வோம். 

இஞ்சியின் நன்மைகள்: இஞ்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது பல சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரோல்’ என்ற சேர்மம், வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.‌ இது வயிற்றுப்போக்கு வயிற்று வலி மற்றும் செரிமானக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது. மேலும் குமட்டல், வாந்தியையும் இஞ்சி தடுக்க உதவும். இது செரிமானத்தை மேம்படுத்தி வாயுவைக் குறைக்கிறது. 

புதினாவின் நன்மைகள்: இஞ்சியைப் போலவே புதினாவும் மற்றொரு பிரபலமான மூலிகை. இது பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. புதினாவில் உள்ள மென்தால் என்ற சேர்மம் வலுவான வலி நிவாரணி. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது வயிற்றுப் பிடிப்புகள், வயிற்று வலி, மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. புதினா செரிமானத்தை மேம்படுத்தி வாயுவை குறைக்கிறது. மேலும், இது மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்தும். 

எது வயிற்று வலிக்கு சிறந்தது? 

இஞ்சி டீ, புதினா டீ இரண்டுமே வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணியாக நம்பப்படுகிறது. இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொருவரின் உடல், வயிற்று வலியின் காரணம் ஆகியவற்றைப் பொறுத்து எது சிறந்தது என்பது மாறுபடும்.‌ 

இதையும் படியுங்கள்:
ஆந்திரா ஸ்பெஷல் பிசரட்டு தோசை வித் இஞ்சி சட்னி செய்யலாம் வாங்க!
Ginger Tea Vs Mint Tea

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டால், இஞ்சி டீ குடிப்பது வாந்தியை தடுத்து, வயிற்றுப்போக்கை நிறுத்த உதவும். வயிற்று பிடிப்புகள் மற்றும் வாயு இருந்தால் புதினா டீ குடிப்பது நல்லது. அதேபோல மலச்சிக்கலுக்கும் புதினா டீ குடிப்பது நல்லது. இருப்பினும், சிலருக்கு இஞ்சி, புதினா என இரண்டுக்கும் ஒவ்வாமை பிரச்சினை இருக்கலாம்.‌ அவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இஞ்சி டீ மற்றும் புதினா டீ இரண்டையும் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணையாகப் பயன்படுத்தலாம். இருப்பினும் ஒவ்வொருவரின் உடல் மற்றும் வயிற்று வலியின் காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து எது சிறந்தது என்பது மாறுபடும். வயிற்று வலி நீண்ட காலமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com