'பூமி அமலாகி'யிலிருக்கும் பொன்னான நன்மைகள்!

கீழாநெல்லி மூலிகை
கீழாநெல்லி மூலிகை

‘பூமி அமலாகி’ என்று அழைக்கப்படும் கீழாநெல்லி மூலிகை செடி, கல்லீரல் ஆரோக்கியத்தைக் காக்கக்கூடிய மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இதன் காரணமாக ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்புகளில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் லிவர் டானிக், மஞ்சள் காமாலை (Jaundice) என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயை குணமாக்கவும் கல்லீரல் தொடர்பான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சாதாரண நெல்லிக்காயுடன் ஒப்பிடும்போது கீழாநெல்லியில் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பலவிதமான சரும வியாதிகள் மற்றும் கல்லீரல் நோய்களை குணமாக்கும் திறன் அதிகம் உள்ளது.

பூமி அமலாகி இயற்கையாகவே பசியைத் தூண்டக் கூடியது. மேலும், இது நீரிழிவு நோய், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகளவு உதிரப் போக்கு மற்றும் சிறுநீர்ப் பாதையில் உண்டாகும் நோய் தொற்று மற்றும் பிற கோளாறுகளையும் குணமாக்கக் கூடியது.

கீழாநெல்லியில் சக்தி வாய்ந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி பயோட்டிக் மற்றும் ஆன்டி ஆஸ்த்மேட்டிக் குணங்கள் அதிகம் உள்ளன. இவை இருமல், சளி, தொண்டை அழற்சி, ஃபுளு மற்றும் ஆஸ்துமாவின் அறிகுறிகள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
சாண்டரிங் செய்வதன் 11 பயன்கள் தெரியுமா?
கீழாநெல்லி மூலிகை

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் கீழாநெல்லி இலைகளை அரைத்து பசும்பாலில் கலந்து வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து அருந்தி வர, மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் இந்த மூலிகையை உபயோகப்படுத்துவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com