சளி, இருமல், தும்மல் போன்ற கபப் பிரச்னைகளை குணமாக்கும் தங்கப்பால்!

தங்கப்பால்
தங்கப்பால்
Published on

ங்கப்பால் என்ற பெயரைக் கேட்ட வுடன் ஏதோ தங்கத்தைப் பாலில் உரசிக் குடிப்பதைத்தான் தங்கப்பால் என்று பலரும் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால், ஏழை எளியவர்களும் குடிக்கக்கூடிய பானம்தான் தங்கப்பால். நன்கு காய்ச்சிய இருநூறு மில்லி லிட்டர் சூடான பாலில் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சிறிது சர்க்கரையோ அல்லது பனங்கற்கண்டோ சேர்த்து கலந்தால், பார்ப்பதற்கு தங்க நிறத்துடன் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. தினமும் ஒரு டம்ளர் தங்கப்பால் சாப்பிட்டு வந்தால் சளி, தும்மல், இருமல் போன்றவை குறைந்து உடல் தெம்பாக இருப்பதை உணர முடியும்.

இதில் மேலும், மருத்துவ குணத்தைக் கூட்ட, சிறிது மிளகுத்தூள் சேர்த்துக்கொள்வது இன்னும் நலம் தரும். அதிக நாட்கள் நீடித்திருக்கும் காய்ச் சல், மனநோய், உடல் காய்ந்து இளைக்கச் செய்யும் நிலைகள், குடல் பலவீனத்தால் ஏற்படும் பெருமலப் போக்கு, இரத்தக் குறைவு, குடல் எரிவுள்ள நிலைகள், நீர் வேட்கை, இதய நோய், வயிற்று வலி, மலக்கட்டு, சிறுநீரக அழற்சி, மூலம் இரத்தமாகக் கக்குவது, இரத்தபேதி, இரத்தமாகச் சிறுநீர் வெளியாவது, கருச்சிதைவு, அதிக உடற் பயிற்சியால் வாட்டம், பட்டினிக் களைப்பு இவற்றிற்கு பால் மிகவும் நல்லது. இதில்தான் மஞ்சள் தூளை நாம் கலக்குகிறோம்.

மஞ்சள் தொண்டையிலும் இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கிறது. கபம் சிறிது சிறிதாக வலியின்றிப் பிரிந்து வெளியாகிறது. நாக்கின் தடிப்பைக் குறைத்துச் சுவை கோளங்களுக்குச் சுறுசுறுப்பளித்து நல்ல சுவையுணர்ச்சியைத் தருகிறது. வாய், நாக்கு, தொண்டை, அண்ணம் முதலிய இடங்களில் ஏற்படும் வேக்காளத்தையும், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவற்றுக்கு சுறுசுறுப்பூட்டி பசி, ஜீரண சக்தியை உண்டாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
மாமியாரை கைக்குள் போட்டுக்கொள்ள எளிய ஆலோசனைகள்!
தங்கப்பால்

குடலில் புழு, கிருமி தங்க விடாமல் வெளியேற்றி விடுகிறது. இது காய்ச்சல் சூட்டைக் குறைக்க வல்லது. மிளகு சுவையில் காரம் மிகுதி, கசப்பும் உண்டு. அதன் ஊடுருவும் தன்மை, சூடான குணம் காரணமாக, பசியை நன்கு தூண்டி உணவைச் ஜீரணிக்கச் செய்யும். உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும். கல்லீரல், குடல், சுறுசுறுப்புடன் இயங்கும்.

பாலில் மஞ்சள் தூள், மிளகு ஆகியவற்றை சேர்த்து காலை, மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுபவர்களுக்கு தலை, மூக்கு, வாய் சார்ந்த சளி உபாதைகள் நீங்கும். அதனால் உடல் பலவீனம் குறைந்து, உடல் தெம்பு ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com