
நம் முன்னோர்கள் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்திய மூலிகைகளில் நெல்லிக்காய் முக்கியமான இடம் பிடிக்கிறது. இன்றைய நவீன உலகில் கூட நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றிய ஆய்வுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் நெல்லிக்காயுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் நன்மைகள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நெல்லிக்காய் + வெல்லம்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியவற்றுடன், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனால் நெல்லிக்காய் நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஒரு பழமாகும். வெல்லம் இயற்கையான இனிப்பு சுவையைத் தருவதோடு, உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிடும்போது இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்து நமக்கு கூடுதல் நன்மைகளைத் தருகின்றன.
நெல்லிக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.
நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கும். வெல்லம் செரிமான மண்டலத்தை சுத்திகரித்து செரிமானத்தை எளிதாக்கும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை விரைவில் முதுமை அடையாமல் பாதுகாத்து, சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். வெல்லம் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து, சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும்.
வெல்லம் உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து, நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட உதவும். நெல்லிக்காய் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, உடல் சோர்வை நீக்கும்.
நெல்லிக்காய், வெல்லம் இரண்டும் நமது உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து நமக்கு விரைவில் பசி எடுக்காமல் இருக்க உதவும். வெல்லம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகளை எரிக்க உதவும்.
நெல்லிக்காய் மற்றும் வெல்லம் இரண்டும் தனித்தனியே நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் நன்மைகள் அதிகம். எனவே, நம் அன்றாட உணவில் நெல்லிக்காய் மற்றும் வெல்லத்தை சேர்த்துக்கொள்வதன் நாம் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.