உடலுக்கு ஊட்டம் தரும் உன்னத பழம் திராட்சை!

உடலுக்கு ஊட்டம் தரும் உன்னத பழம் திராட்சை!

டலுக்கு மிகுந்த ஊட்டச்சத்து தரும் திராட்சைப் பழம் கருப்பாக இருந்தாலும், கண்களுக்கு நல்ல விருந்து. பழுத்தும், உலர்ந்தும் எல்லா காலங்களிலும் பல்வேறு நன்மைகளை செய்வதால் இதற்கு, 'கனிகளில் அரசி' என்று பெயர். கொத்துக் கொத்தாக காணப்படும் திராட்சை பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றின் பயன்கள் என்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்!

பச்சை, வெள்ளை, ஊதா, கருப்பு வண்ணங்களில் காணப்படும் திராட்சை பழங்களில் பச்சை நிறத்தில் உள்ள திராட்சையில்தான் அமிலச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், கருப்பு திராட்சைப் பழத்தில்தான் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

எளிதில் ஜீரணிக்கக் கூடிய பழச்சர்க்கரை நிறைந்து காணப்படும் திராட்சையானது சில வகை அமிலங்களையும் கொண்டு தனிச் சிறப்புடன் திகழ்கிறது. இந்தப் பழச்சாறு அருந்தப்பட்ட இருபது நிமிடங்களுக்குள் பழச்சர்க்கரையானது இரத்தத்துடன் கலந்து விடும். இது உடலுக்கு சக்தியை அளிப்பதுடன், இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி உடல் காயங்களை விரைவில் குணமாக்கும்.

திராட்சையில் அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி நிறைந்து காணப்படும் திராட்சையை முடிந்த அளவு உட்கொண்டால் நோய் நொடியின்றி வாழலாம்.

பயன்கள்: இது தாது விருத்தி, மலக்கட்டைப் போக்குதல், சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது. ஜீரண உறுப்புகளுக்கு வலிமையைத் தந்து, நல்ல முறையில் செயல்பட வைக்கிறது. குடல் புண்ணால் அவதியுறுபவர்கள் திராட்சை பழச்சாற்றின் மூலம் விரைவில் குணமடையலாம். உடல் நல்ல வலிமை பெறவும், பசுமை நிறைந்த திராட்சைப்பழம் மட்டுமின்றி காய்ந்த திராட்சையான கிஸ்மிஸ் பழமும் நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது. ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் அற்புத மருந்தாகவும் திராட்சை பழம் விளங்குகிறது.

பயன்படுத்தும் முறை: காய்ந்த திராட்சை பழத்தை இளம் சூடுள்ள வெந்நீரில் ஊற வைத்து பனங்கற்கண்டையும் சேர்த்து நன்கு கரைத்துப் பிழிந்து சிறு பிள்ளைகளுக்குக் கொடுத்தால் காய்ச்சல், மலக்கட்டு, ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

காய்ந்த திராட்சை பழத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலை எலுமிச்ச பழச்சாறு, இஞ்சி சாறு இவற்றை சிறிதளவு கலந்து கொடுத்து வர, பித்த சம்பந்தமான நோய்கள், தலைசுற்றல் குணமாகும்.

பன்னீர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை தெளிவு பெறும். இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் திராட்சை பழம் நல்ல மருந்து. திராட்சைப் பழத்தை பன்னீரில் முந்திய நாள் இரவே ஊறவைத்து மறுநாள் அதிகாலையில் உண்டு வர, இருதய நோய்கள் குணமாகும்.

காய்ந்த திராட்சை, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் பசு நெய்யில் வதக்கி சாப்பிட வறட்டு இருமல் மற்றும் கப சம்பந்தமான நோய்களை குணப்படுத்தலாம். நீண்ட நாட்களாக நோயால் படுக்கையில் இருந்து தேறி வருபவர்களுக்கு பசுமையான திராட்சையை உண்ணக் கொடுப்பதன் மூலம் விரைவில் எழுந்து நடக்கும் ஆற்றலையும் பெறுவார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொல்லைகள் தீரவும் திராட்சை பழம் நல்ல மருந்தாகிறது. மூளை ஆற்றலுக்கு இது சிறந்தது. இரும்புச் சத்து இந்தப் பழத்தில் நிறைந்து காணப்படுவதால் இரத்த சோகையையும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது. பாயசத்தில் முந்திரி, திராட்சை இவற்றை சேர்க்க அதன் சுவை அதிகரிப்பதுடன் குடலுக்கும் நல்ல வலுவை அளிக்கும்.

பசும்பாலை ஓரளவு காய்ச்சி ஆறவைத்து இதனுடன் திராட்சை பழச்சாறு, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்துப் பருகி வர நரம்பு தளர்ச்சி குணமடையும். மார்புச் சளியைக் கரைத்து வெளியேற்றவும், குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும், வாய்வுத் தொல்லைகளைப் போக்கி நன்கு பசி ஏற்படுத்தவும், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கவும் திராட்சை பழம் நல்ல மருந்து பொருள் ஆகிறது.

புற்றுநோயை குணப்படுத்தவும், காச நோய் மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும், உடல் பருமனை குறைப்பதற்கும் ஜீரண சக்தியை பெருக்கவும், முதுமையை தவிர்ப்பதிலும் இப்பழம் முன் நிற்கிறது.

திராட்சைப் பழம் கிடைக்கும் காலங்களில் தினந்தோறும் சிறிதளவு உட்கொண்டு வந்தால் மலச்சிக்கலைப் போக்கலாம். 'கிட்னி'யில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் திராட்சை நல்ல மருத்துவப் பொருளாக இருந்து குணப்படுத்தும் தன்மையைப் பெற்றுள்ளது.

ஆதாரம்: ‘பழங்களின் மருத்துவ குணங்கள்’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com