மாட்சா டீ கேள்விப்பட்டிருக்கீங்களா?

Have you heard of matcha tea?
Have you heard of matcha tea?https://www.healthshots.com

மீப காலமாக மாட்சா (Matcha) டீ அருந்துவது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. க்ரீன் டீ இலைகளைப் பொடியாக்கி, அதில்  தயாரிக்கப்படும் இந்த டீ, அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டதாக உள்ளது. உடலின் சக்தியை அதிகரிக்கவும்,  மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும், மனதை அமைதிப்படுத்தி கவனத்துடன் செயல்படவும் இந்த டீ உதவுகிறது.

இதிலுள்ள சக்தி வாய்ந்த கஃபைன் மற்றும் L.தியானைன் என்ற பொருட்கள் உடலுக்கு தொடர்ந்து சக்தியளித்து, ஒருமுகப்படுத்திய கவனத்துடன் செயலாற்ற உதவுகின்றன. படபடப்பில்லாத அமைதியான மன நிலையைத் தருகிறது.

அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொண்டது மாட்சா டீ. அதில் ஒன்றான கேட்டச்சின்கள் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸையும் வீக்கத்தையும் குறைக்க வல்லது. மேலும், அழிவை உண்டுபண்ணும் ஃபிரி ரேடிகல்களை எதிர்த்துப் போராடவும் செய்யும். கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தையும் காக்கும்.

மாட்சாவிலுள்ள கூட்டுப் பொருட்கள் மெட்டபாலிசம் நடைபெறும்போது அதிகளவு கொழுப்பை எரிக்கச் செய்கின்றன. அதனால் அதிகமான கலோரிகள் வெளியேறுகின்றன. இது எடை குறைப்பிற்கு உதவி புரிந்து, நம் உடல் எடையை சமநிலையில் பராமரிக்கச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
இரத்தக் குழாய் அடைப்பு ஏன் வருகிறது தெரியுமா?
Have you heard of matcha tea?

மாட்சா டீயில் அதிகளவு வைட்டமின் A, C, E மற்றும் பொட்டாசியம், இரும்புச் சத்து போன்ற தாதுக்களும் உள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்து, சாதாரணமாக வரக்கூடிய நோய்த் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி வெற்றிகொள்ளச் செய்கின்றன.

சீனாவிலும் ஜப்பானிலும் அதிகமாக அருந்தப்படும் இந்த டீயை நாமும் அருந்துவோம். உடல் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com