குளிர்காலத்தில் இந்த ஒரு கிழங்கு வீட்டில் இருந்தா... டாக்டர் செலவு மிச்சம்!

Sweet potato benefits in winter season
Sweet potato benefits
Published on

குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருளாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருக்கிறது. இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் இருப்பதோடு வைட்டமின் பி, சி ,ஏ, பி6, பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் ருசியாக உள்ளது. அந்த வகையில் குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு(Sweet potato) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து ஏராளமாக இருப்பதால், குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் செரிமானம் மண்டலம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக செரிமானம் மேம்பட்டு வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது .

எடை இழப்புக்கு உதவும்

உடல் எடையை குறைக்க குளிர்காலத்தில் முயற்சிப்பவர்கள் சாப்பிடும் உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து ஏராளமான அளவு நிறைந்து இருப்பதால் நீண்ட நேரம் வயிறை நிறைவாக வைத்திருக்கும். இதனால் பசி உணர்வு ஏற்படாமல் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். இதன் காரணமாக குளிர்காலத்தில் உடல் எடையை சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் சுலபமாக குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சக்கரை வள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் சி காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் குளிர் காலத்தில் இந்தக் கிழங்கை சாப்பிடுவதன் மூலம் பருவ கால நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடலை சூடாக வைக்கும்

உடலை சூடாக வைத்திருக்க குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது சிறந்தது. கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாக சர்க்கரைவள்ளி கிழங்கு இருப்பதால் நீண்ட கால ஆற்றலை வழங்கி, முழுமையாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு இதய நோய் அபாயத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆரோக்கியமான சருமத்திற்கு

குளிர் காற்று காரணமாக குளிர்காலத்தில் சருமம் மோசமாக பாதிக்கப்பட்டு வறட்சி அடைகிறது. இதற்கு சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ சூரிய ஒளி மற்றும் மோசமான வானிலையிலிருந்து சருமத்தை பாதுகாத்து சருமத்தை பிரகாசமாகவும் ஈரப்பதமாக வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
இனி வயதே ஆகாதா? முதுமையை விரட்டும் அந்த 'நீல' ரகசியம் இதோ!
Sweet potato benefits in winter season

குளிர்காலத்தில் பல்வேறு நன்மைகளை அளிக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com