வீடியோ கேம் விளையாடுபவர்கள் ஜாக்கிரதை.. காதுகள் முக்கியம் பிகிலு!

Playing Video Games.
Playing Video Games.

கேம் விளையாடினால் கண்கள் பாதிக்கப்படும் என்பதை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கேம் விளையாடும் போது நீங்கள் அதிக நேரம் ஹெட் போன் பயன்படுத்துவதால் உங்களின் காதுகளின் திறனும் வெகுவாக பாதிக்கும் என ஆய்வுகள் சொல்கிறது.

தொடர்ச்சியாக ஹெட் போன் மாட்டிக்கொண்டு கேம் விளையாடும் போது, அதிக சத்தம் காதுக்குள் கேட்பது மட்டுமின்றி, காதுகளுக்கான காற்றோட்டம் தடைபட்டு காலப்போக்கில் காதுகளில் கேட்கும் திறன் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றைய காலத்தில் அதிகபடியாக ஹெட்ஃபோன்ஸ், இயர்பட்ஸ் போன்றவை பயன்படுத்தப்படுவதால், அதிக இரைச்சலை காதுகள் சந்திக்கின்றன. எனவே அதிக சத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் வீடியோ கேம் விளையாடுவதாக சொல்லப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கேமிங் சென்டர் சென்று வீடியோ கேம் விளையாடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் அதிக சத்தத்தில் வீடியோ கேம் விளையாடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் வீடியோ கேம்முக்கும் காதுகள் சார்ந்த பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கின்றனர். இப்படி அதிக சத்தத்தில் கேம் விளையாடினால் நாளுக்கு நாள் ஒலியின் தீவிரம் அதிகரிக்கும்போது, சராசரி கேட்கும் திறன் குறைவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 

இதையும் படியுங்கள்:
இனி யூட்யூபில் கேம் விளையாடலாம்! எப்படி? 
Playing Video Games.

எனவே வீடியோ கேம் விளையாடும் போது உங்களது காதுகளை பாதுகாக்க,

  1. ஒலியின் அளவை பாதுகாப்பான அளவில் வைத்து விளையாடுங்கள். 

  2. ஹெட் போன் பயன்படுத்தி கேம் விளையாடுவதற்கு பதிலாக ஸ்பீக்கர்கள் மூலமாக சத்தத்தைக் கேட்டு விளையாடலாம்.

  3. இப்போது ஒளியை கண்காணித்து பயன்படுத்தும் செயலிகள் அதிகம் வந்துவிட்டது. அதை உங்கள் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தலாம் அல்லது இந்த அம்சம் உள்ள ஹெட்போனை பார்த்து வாங்கி பயன்படுத்துங்கள். 

  4. நீண்ட நேரம் அதிக சத்தத்தில் வீடியோ கேம் விளையாடுவதைத் தவிர்க்கவும்.

  5. பல ஆண்டுகளாக ஒரே ஹெட் போனை பயன்படுத்தாதீர்கள். 

  6. முடிந்தவரை நல்ல பிராண்டட் ஹெட்போன்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com