உடல் எடையை குறைக்க உதவும் அற்புத விதைகள்!

Amazing seeds to help you lose weight.
Amazing seeds to help you lose weight.

நீங்கள் விரைவில் உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் உங்களின் உணவில் சில விதைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சமீப காலமாகவே இந்த விதை உணவுகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை ஓட்ஸ், சாலட் போன்றவற்றில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய விதைகளை நீங்கள் உணவில் சேர்ப்பதன் மூலமாக உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும்.

சியா விதைகள்: உடல் எடையைக் குறைக்க மிகவும் பிரபலமாக மக்களால் அறியப்படும் விதை எதுவென்றால் அது சியா விதைதான். இதில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்திருப்பதால் ஒரு திருப்தியான உணர்வை ஏற்படுத்தும். இதை ஒரு திரவத்துடன் கலந்து பருகும்போது, அது பசியை கட்டுப்படுத்துகிறது எனச் சொல்லப்படுகிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

ஆளி விதைகள்: ஆளி விதைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இதில் நிறைந்து காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை சிறப்பாக மாற்றும். குறிப்பாக, இது சர்க்கரை உறிஞ்சும் அளவை குறைத்து நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும். இதிலும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பண்புகள் உள்ளதால் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

பூசணி விதைகள்: உடல் எடையைக் குறைக்கும் அதிசய விதைகளில் பூசணி விதையும் ஒன்று. இதில் ஆரோக்கிய கொழுப்புக்களும் அதிக புரத சத்தும் நிறைந்துள்ளன. இவை நமது உடல் எடையைக் குறைத்து பல நன்மைகளை அளிக்கிறது. இது சாலட் மற்றும் காலை உணவுக்கு ஏற்ற உணவாகும்.

சூரியகாந்தி விதைகள்: சூரியகாந்தி விதையில் விட்டமின் ஈ, ஆரோக்கியமான கொழுப்புகள், செலினியம், மெக்னீசியம், புரதம், நார்ச்சத்து ஆகிய அனைத்துமே நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு ஆற்றலை வழங்கி பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த விதைகளை நீங்கள் சாதாரணமாகவும் அல்லது வருத்த உணவாக உட்கொள்ளலாம். சில சமயங்களில் அதிகமாக பசி எடுக்கும்போது இவற்றை உட்கொண்டால் பசி அடங்கும்.

மேற்கூறிய இந்த விதைகளுக்கு நமது உடல் எடையை குறைக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே, இதை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம் இவற்றை அதிகமாக உட்கொண்டால் கலோரி அதிகரிக்கும் என்பதால், சரியான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com