வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடலாமா?
Published on

லகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் ஒன்றாக சாக்லேட் விளங்குகிறது. இது கோக்கோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து நிலவினாலும், சாக்லேட்டில் பிளாவனாய்டுகள், காபின்,  தியோ புரோமைன் உள்ளிட்ட உடலுக்கு நன்மை சேர்க்கும் சேர்மங்களும் கலந்துள்ளன.

‘காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடலாமா?’ என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. சாக்லேட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனை தீர்மானிக்கும். ஏனெனில், ஒவ்வொருவரின் உடல்வாகும், உணவு முறையும் வேறுபட்டவை. சிலருக்கு வெறும் வயிற்றில் எதை சாப்பிட்டாலும் ஏற்றுக்கொள்ளும். இன்னும் சிலருக்கு காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரோ, வெந்நீரோ அருந்தினால்தான் வயிறு சுத்தமாகும்.

நீரிழிவு நோயாளிகள் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அதன் கசப்புத் தன்மையால் நோய் கட்டுக்குள் இருக்கும் என்ற புரிதலால் சாக்லேட் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார்கள். வெறும் வயிற்றில் சாக்லேட்டை ஏன் சாப்பிடக்கூடாது? அப்படிச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

செரிமான பிரச்னை: எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும். அதே வேலையில் டார்க் சாக்லேட் சிலருக்கு செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லேட் சாப்பிடக் கூடாது. டார்க் சாக்லேட்டை பொறுத்தவரை மற்ற சாக்லேட்டுகளை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் அதிக கொக்கோ உள்ளடங்கி இருப்பதால் மற்ற சாக்லேட் வகைகளை விட, இதில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம்.

சர்க்கரை கூடும்: டார்க் சாக்லேட்டை ஒப்பிடும்போது மில்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட் இரண்டும் ஆரோக்கியம் குறைவானவை. இவற்றில் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். கோகோ குறைவாகவே இருக்கும். வெறும் வயிற்றில் இந்த இரண்டு சாக்லேட்களையும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

சாப்பிட வேண்டிய முறை: நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய நோயாளிகள் வெறும் வயிற்றில் சாக்லேட்டை சாப்பிடுவது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றவர்கள் குறைவாக சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதோடு குமட்டல், செரிமான கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் பருகி விட்டு அதன் பிறகு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com